கார்த்திக் விழாவில் ரகளை: ஆதீனம் மண்டை உடைந்தது
திருநெல்வேலி:
நெல்லை மாவட்டம் நெல்கட்டு செவல் கிராமத்தில் பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவர்கார்த்திக் கலந்து கொண்ட பூலித் தேவன் பிறந்த நாள் விழாவில் பெரும் ரகளைஏற்பட்டு, வன்முறை மூண்டது.
நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர்அருகே உள்ள நெல்கட்டு செவல் கிராமத்தில்பிறந்தவர் ஆங்கிலேயரை எதிர்த்து வீரப் போர் புரிந்து முடிந்த பூலித்தேவன்.இவருடைய 290வது பிறந்த நாள்விழா நேற்று இரவு நெல்கட்டு செவல் கிராமத்தில்நடந்தது.இந்த விழாவில் பார்வர்ட் பிளாக்கட்சித் தலைவர் கார்த்திக், பாஜக எம்.பி.திருநாவுக்கரசர், மதுரை ஆதீனம், சசிகலா கணவர் நடராஜன், இசையமைப்பாளர்கங்கை அமரன், இயக்குநர் மனோஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேடையில் இவர்கள் அமர்ந்திருந்த போது கார்த்திக் ரசிகர்களும், பா.பிளாக்தொண்டர்களும் நெருக்கியடித்து மேடையை நோக்கி முன்னேறினர். போலீஸார்அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். கூட்டம் கட்டுக்கடங்காமல்போனதால் போலீஸார் தடியடியில் இறங்கினர்.
இதையடுத்து எழுந்த கார்த்திக், எனது சகோதரர்களை அடிக்க வேண்டாம்.சகோதரர்களே அனைவரும் அமைதியாக இருங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.இதையடுத்து சற்று அமைதி திரும்பியது.
இருப்பினும் மேடைக்கு அருகே இருந்த மரம், கட்டடங்களில் அதிக அளவிலானரசிகர்கக்ள் அமர்ந்திருந்தனர். அனைவரும் கார்த்திக்கை சீக்கிரம் பேச விடுங்கள் என்றுசப்தம் போட ஆரம்பித்தனர். மேலும் மேடையில் இருந்தவர்கள் மீது செருப்புகளைதூக்கி வீசினர்.
அதில் ஒரு செருப்பு பூலித் தேவன் வாரிசான நெல்கட்டு செவல்கிராம பஞ்சாயத்துதலைவி கோமதி முத்துராணி மீது விழுந்ததால் பரபரப்புஏற்பட்டது. இதையடுத்துபோலீஸார் அங்கு விரைந்து சென்று கார்த்திக் ரசிகர்கள் மீது தடியடி நடத்தினர்.
இதையடுத்து மேலும் ரகளை அதிகரித்தது. மதுரை ஆதீனம் பேசும் போது சிலர்கற்களை வீசி தாக்கினர். இதில் ஒருகல் ஆதீனம் தலையில் விழுந்தது. அவருக்குதலையிலிருந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து அவருடன் வந்திருந்தவர்கள்விபூதியை அந்த இடத்தில் வைத்து ரத்தத்ததை நிறுத்த முயன்றனர்.
இதனால் கூட்டத்தில் பெரும் சலசப்பு ஏற்பட்டது. சிலவிஷமிகள் உள்ளேபுகுந்துள்ளனர். அவர்களை விரட்டியடியுங்கள் என்று மேடையில் இருந்த தலைவர்கள்கோபமாக கூறினர்.
அதன் பின்னர் போலீஸார் மீண்டு சென்று கூட்டத்தைக் கட்டுப்படுத்தினர். பின்னர்திருநாவுக்கரசர் பேசும் போதும் கலாட்டா ஏற்பட்டது. இதனால் கோபமடைந்ததிருநாவுக்கரசர் தனது பேச்சை நிறுத்தி விட்டு கூட்டத்தினரை பார்த்து கடுமையாகஎச்சரித்தார். இதனால் சற்று அடங்கினர்.
இப்படி கலாட்டா, கல்வீச்சு, செருப்பு வீச்சுமாக பூலித்தேவன் பிறந்த நாள் விழாஅமளி துமளியுடன் முடிந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications