பெரியார் அணை: மேலும் ஒரு கேரள அமைச்சர் ஆய்வு

Subscribe to Oneindia Tamil

தேக்கடி:

முல்லைப் பெரியாறு அணையின் ஸ்திரத்தன்மை குறித்து மேலும் ஒரு கேரளஅமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழக, கேரள மாநில எல்லையில உள்ள முல்லைப் பெரியாறு அணை தென்மாவட்டங்களின் பெரியார்-வைகை பாசன விவசாயிகளின் உயிர்நாடியாக உள்ளது.

சமீபத்தில் அணையிலிருந்து சில கிலாாே மீட்டர் தொலைவில் உள்ள தேக்கடிவனவிலங்குகள் சரணாலயப் பகுதியில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டதாக கேரளஅரசு தெரிவித்தது. இதனால் முல்லைப் பெரியார் அணையின் ஸ்திரத்தன்மை குறித்துஅது சந்தேகம் எழுப்பியது.

ஆனால் இதை தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் நிராகரித்தனர். அணைப்பகுதியில் நில நடுக்கம் ஏற்படவே இல்லை. எனவே அணையின் பலம் குறித்துசந்தேகமே தேவையில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும் இந்தப் பிரச்சினையை பெரிதாக ஊத முடிவு செய்த கேரள தரப்பு தனதுஅமைச்சர்களை அடுத்தடுத்து அணைக்கு அனுப்பி அணை பலமாக உள்ளதா எனறுபரிசோதித்து வருகிறது.

கடந்த 2 வாரங்களில் 2 அமைச்சர்கள் வந்து அணையைப் பார்வையிட்டுச்சென்றுள்ளனர். இந்த நிலையில் நேற்று கேரள மாநில வருவாய்த்துறை அமைச்சர்ராஜேந்திரன் வந்து அணையைப் பார்வையிட்டார்.

முல்லைப பெரியாறு அணையை நிர்வகித்து, பராமரிக்கும் பொறுப்பு தமிழக அரசிடம்தான் உள்ளது. ஆனால் கேரள அரசு நில நடுக்க சர்ச்சையைக் கிளப்பிய பின்னர் அந்தமாநிலத்திலிருந்து 3 அமைச்சர்கள் வந்து பார்வையிட்டு சென்றுள்ளனர். ஆனால்தமிழக அமைச்சர்கள் யாரும் இதுவரை இந்தப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவிலிருந்து வரும் அமைச்சர்கள், அதிகாரிகள் குழு, தமிழக அதிகாரிகளை ஒருபொருட்டாகவே மதிப்பதில்லை. அவர்களாக வருகிறார்கள், ஆய்வு என்ற பெயரில்எதையாவது கூறிச் செல்கிறார்கள். தமிழக அதிகாரிகள் இவற்றை வேடிக்கை மட்டுமேபார்த்துக் கொண்டிருக்க முடிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+