மும்பை குண்டுவெடிப்பு: 17 பேர் கொண்ட கும்பல் நடத்தியதாகமுக்கிய தீவிரவாதி தகவல்!
மும்பை:
மும்பை ரயில் நிலையங்களில் கடந்த ஜூலை 11ம்தேதி நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை 17 பேர் கொண்ட கும்பல் மேற்கொண்டதாக போலீஸாரிடம்பிடிபட்டுள்ள முக்கிய தீவிரவாதியான தெளஹீன் அக்மல் ஹஸ்மி தெரிவித்துள்ளான்.
ஜூலை 11ம் தேதி மும்பையில் உள்ள பல்வேறு ரயில் நிலையங்களில் தொடர்குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 200 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி தெற்கு காஷ்மீரில் ஹஸ்மியைபோலீஸார் கைது செய்தனர்.இவனை தற்போது மும்பை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் தங்கள் வசம்கொண்டு வந்துள்ளனர். ஹஸ்மியை தற்போது மும்பைக்கு போலீஸார் அழைத்துவந்துள்ளனர்.
ஹஸ்மியிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.ஹஸ்மி பாகிஸ்தானைச் சேர்ந்தவன். அல் பதர் என்ற தீவிரவாத அமைப்பின்கமாண்டராக செயல்பட்டு வந்தான்.
மொத்தம் 17பேர் கொண்ட தீவிரவாதக் கும்பல் தான் மும்பை ரயில்களில்வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளது. இவர்களில் 16பேர் குண்டு வெடிப்பைநிகழ்த்தி விட்டு காஷ்மீருக்கு தப்பி விட்டனர். ஒருவன் குண்டு வெடிப்பின் போதுகொல்லப்பட்டு விட்டான்.
தீவிரவாத அமைப்பில் ஹஸ்மி சேருவதற்கு முன்பு பாகிஸ்தான் ராணுவத்தில்பணியாற்றியுள்ளான். ஆப்கானிஸ்தானில் 20 நாட்கள் தீவிரவாதப் பயிற்சிஎடுத்துள்ளான்.
ஜம்மு-உதம்பூர் பிராந்தியத்திற்கான அல் பதர் அமைப்பின் கமாண்டராக செயல்பட்டுவந்துள்ளான். ஆகஸ்ட் 23ம் தேதி இவனை குல்காம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் வைத்து புற ராணுவப்பிரிவினர் பிடித்தனர்.
இன்று பிற்பகல் மும்பை நீதிமன்றத்தில் ஹஸ்மியை போலீஸார் ஆஜர்படுத்துகின்றனர்.அதன் பின்னர் தங்களது காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தவுள்ளனர். இந்தவிசாரணையின் போது மும்பை தாக்குதல் தொடர்பான முக்கிய விவரங்கள்கிடைக்கும் எனத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications