அதிகரிக்கும் போலி பிஷப்புகள்- எச்சரிக்கை
சென்னை:
அதிகரித்து வரும் போலி பிஷப்புகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கத்தோலிக்க திருச்சபை கோரிக்கை விடுத்துள்ளது.
ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் திட்டம் என்று கூறி தமிழகம் முழுவதும்நூற்றுக்கணக்கான காண்டிராக்டர்களை ஏமாற்றியதாக பிஷப் ஆனந்தராஜ் என்றமோசடிப் பேர்வழி போலீசில் சிக்கியுள்ளார்.இதேபோல ஏமாற்றிய இன்னொரு பிஷப்பான யோபு சரவணனை போலீஸார் தேடிவருகின்றனர்.
இந் நிலையில், கத்தோலி திருச்சபை சார்பில் சென்னை-மயிலை மண்டல ஆர்ச் பிஷப்சின்னப்பா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பிஷப் அந்தஸ்து பெற கடுமையான விதிமுறைகள் உள்ளன. தனிப்பட்ட யாரும்தங்களை பிஷப்பாக அறிவித்துக் கொள்ள முடியாது.
எனவே பிஷப்புகள் என்று கூறுவோரின் உண்மை நிலை குறித்து பொது மக்கள்கவனத்துடன் இருக்க வேண்டும். போலி பிஷப்புகள் குறித்து உஷாராக இருக்கவேண்டும்.
மதத்தைப் பயன்படுத்தி மக்களை சுரண்டும் இதுபோன்ற போலி பிஷப்புகள் மீதுதமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நடவடிக்கைக்குகத்தோலிக்க திருச்சபை முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications