குரோகோடைல் ஹன்டர்.. ஆபத்தே வாழ்க்கை
சிட்னி:
தனது நெஞ்சில் பாய்ந்த மீனின் விஷ வாலை வெளியே இழுத்துவிட்டுத் தான் நீருக்குள் மயக்கமாகிபிணமாகியுள்ளார் குரோகோடைல் ஹன்டர் ஸ்டீவ் இர்வின்.
முதலைகள், பாம்புகள், சுறா மீன்கள் ஆகிய மிக ஆபத்தான விலங்குகளை வெறும் கைகளால் அடக்கிஎல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்டீவ் இர்வின் நேற்று கடலுக்கடியில்விஷ மீனின் வால் நெஞ்சில் குத்தி பலியாகிவிட்டார்.மிக ஆபத்தான வாழ்க்கை வாழ்ந்து வந்த இர்வினின் மரணமும் ஆபத்தாகவே முடிந்திருக்கிறது.ஆஸ்திரேலியாவின் போர்ட் டக்ளஸ் கடல் பகுதியில் பவளப் பாறைகளுக்கு இடையே வசிக்கும் ஸ்டிங்ரே என்றஅபாயகரமான மீன் குறித்த டாகுமெண்டரி தயாரித்துக் கொண்டிருந்தார் இர்வின்.
அப்போது இவரது மார்பில் அந்த மீனின் விஷ வால் குத்தியது. இதயத்தில் ஓட்டை விழுந்த நிலையில் மீனின்வாலை வெளியில் இழுத்துள்ளார். ஆனால் அத்துடன் மயங்கிவிட்டதால் கடலிலேயே மூச்சுத் திணறிபலியாகியுள்ளார். இர்வின் மரணத்தை டாகுமெண்டரியை படம் பிடித்த கேமராமேன் பதிவு செய்துள்ளார்.
மிக வலுவான முட்கள் போன்ற அமைப்பு கொண்ட கத்தி போன்ற அந்த மீனின் விஷ வால் இர்வினன்நெஞ்சை குத்துவதையும், அவர் ரத்த சொட்ட சொட்ட அதை வெளியில் இழுப்பதையும் படம் பிடித்தகேமராமேன் பின்னர் நிலைமையை உணர்ந்து இர்வினை நோக்கி பாய்ந்துள்ளார். ஆனால், அதற்குள்மயங்கிவிட்ட இர்வின் இருதயம் இயங்காமல் போனதாலும் மூச்சுத் திணறியும் உயிரிழந்துவிட்டதாக அவரதுஉதவியாளர் தெரிவித்துள்ளார்.
44 வயதான இர்வினின் மறைவு உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.
இர்வின் குறித்த டாகுமெண்டரியை ஒளிபரப்பவும், அவரது பெயரில் ஒரு விலங்குகள் பாதுகாப்பு நிதியத்தைஉருவாக்கவும் டிஸ்கவரி சேனல் முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் இர்வின் மரணமடையும்போதுஎடுக்கப்பட்ட வீடியோவை ஒளிபரப்பப் போவதில்லை என்றும் டிஸ்கவரி அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் குயீன்ஸ்லாந்தில் இர்வினுக்கு சொந்தமான முதலை பூங்கா உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications