ஆனந்தராஜ்- ஏமாந்த காண்டிராக்டர்கள் பல்டி
சென்னை:
போலி பிஷப் ஆனந்தராஜால் பல கோடி பணத்தை இழந்த காண்டிராக்டர்கள்இணைந்து சங்கம் ஏற்படுத்தியுள்ளனர். ஆனந்தராஜூடன் சமரசம் செய்துகொண்டுள்ள இவர்கள் அவர் மீது கொடுத்த புகார்களை வாபஸ் பெற முடிவுசெய்துள்ளனர்.
ஏழைகளுக்கு இலவச வீடுகள்கட்டித் தருவதாக கூறி தமிழகம்முழுவதும்நூற்றுக்கணக்கான காண்டிராக்டர்களிடம் கோடிக்கணக்கான பணத்தை சுருட்டியபோலி பிஷப் ஆனந்தராஜ், தனது மனைவி டெய்சியுடன் தற்போது கம்பி எணணிக்கொண்டுள்ளார்.இந் நிலையில் ஆனந்தராஜால் ஏமாற்றப்பட்ட காண்டிராக்டர்கள் இணைந்து சங்கம்அமைத்துள்ளனர். இந்த சங்கத்தின் தலைவராக ஆந்திர மாநிலம் காக்கி நாடாவைச்சேர்ந்த ஜோஸ்வா ராஜசேகர் சின்ஹா, செயலாளராக பரமக்குடியைச் சேர்ந்தவிக்கிரமசிங்கம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஒரு அறிககையை வெளியிட்டுள்ளனர். அதில்,
நாங்கள் அனைவரும் பேரூரில் உள்ள மோலின மிஷன் சர்ச் மற்றும்ஆர்.ஆர்.ஆர்.டி.ஏ. அறக்கட்டளையைச் சேர்ந்த நிறுவனர் பிஷப் ஆனந்தராஜுடன்,அவர் ஏற்கனவே கொடுத்த விளம்பரத்தின் அடிப்படையில் எங்களுக்கும்,எங்களைப்போன்ற பாதிக்கப்பட்ட கட்டட காண்டிராக்டர்களுக்கும் ஏற்கனவேஏழைகளுக்கு இலவச வீடுகள் கட்டித் தருவது தொடர்பாக ஒப்பந்தம் ஏற்பட்டு சிலசூழ்நிலைகளின் காரணமாக அப்பணியில் தடங்கல் ஏற்பட்டது.
இதன் காரணமாக நாங்களும், மற்றும் சில ஒப்பந்தகாரர்களும் குற்றவியல்நடவடிக்கை எடுக்கும் பொருட்டு பேராயர்ஆனந்தராஜ், மற்றும் அவரைச்சார்ந்தவர்கள் மீதுமுதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய பல்வேறு மாவட்டங்களில்புகார் கொடுத்தோம்.
அதன் பேரில் ஆனந்தராஜ் மற்றும் மற்றவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டு புலன் விசாரணை நடந்து வருகிறது. இந்தப் பிரச்சினையைஎங்களுக்குள் சுமூகமாக முடித்துக் கொள்ள ஆனந்த்ராஜை காவல் துறையினர் கைதுசெய்வதற்கு முன்பாகவே,
இரு சாராரும் சந்தித்து ஒருமித்த கருத்துடன் பேசி ஏகமனதாக ஒரு முடிவைஏற்படுத்திக் கொண்டோம்.
இதன்படி, ஆனந்தராஜுக்கும், அவரதுகுடும்பத்திற்கும் ஒப்பந்தக்காரர்களால்ஏதாவது பிரச்சினை ஏற்படடால் பேசித் தீர்த்துக் கொள்வது எனமுடிவெடுத்துளளோம்.
மேலும், ஆனந்தராஜ் தனது அசையும், அசையா சொத்துக்களை ஒப்படைத்துவிடுவது எனவும், அவரது அறக்கட்டளையை எஙகளிடம் ஒப்படைத்து விடுவதுஎனவும் ஒப்பந்தக்காரர்களுக்கு சேர வேண்டிய தொகையை ஆனந்தராஜ் மற்றும்சுரேஷ்குமார்முன்னிலையில் பகிர்ந்து கொடுப்பது எனவும் முடிவுசெய்யப்பட்டிள்ளது.
இனி வரும் காலங்களில் எங்களைச் சார்ந்தவர்களும், யாரும் பிஷப் ஆனந்தராஜ்மற்றும் அவரது குடும்பத்தார் மீது புகார் கொடுக்க மாட்டோம் என்றும் கொடுத்தபுகார்களை உடனடியாக வாபஸ் பெறுவது என்றும் முடிவு செய்துள்ளோம்.
ஆனந்தராஜ் பெற்ற தொகையை சரிவர கணக்குப் பார்த்து பாதிக்கப்பட்டவ்களுக்குகிடைக்க ஏற்பாடு செய்து கொடுக்கிறோம் என்றும் கூறியுள்ளனர்.
ஆனந்தராஜ் தொடர்பான வழக்குகள் சூடு பிடித்துக் கொண்டுள்ள நலையில்,அவரால் ஏமாற்றப்பட்ட காண்டிராக்டர்கள் இப்படி ஒரு அறிவிப்பைவெளியிட்டிருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர்களுக்கு பணத்தைத் திருப்பித் தருவதாக ஆனந்தராஜ் ஒப்புக்கொண்டுவிட்டதால், வழக்கு-செலவு, இழுத்தடிப்புகளை தவிர்க்க காண்ட்ராக்டர்கள்இந்த முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications