ஜார்க்கண்டில் பாஜக ஆட்சி கவிழ்கிறது
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக அரசு கவிழும் சூழல் உருவாகியுள்ளது. அம் மாநிலமுதல்வர் அர்ஜூன் முண்டாவுக்கு எதிராக 4 அமைச்சர்கள் போர்க் குரல்எழுப்பியுள்ளதோடு தங்களது பதவிகளையும் ராஜினாமா செய்துள்ளனர்.
அவர்களுக்கு ஒரு சுயேச்சை எம்எல்ஏவும் ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால்அர்ஜூன் முண்டா அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.81 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் கடந்த தேர்தலில் பாஜக கூட்டணி 37இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 36 இடங்களிலும் வென்றன.
ஆட்சியமைக்க 41 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும் என்ற நிலையில் 4சுயேச்சைகளின் ஆதரவோடு ஆட்சியை அமைத்தது பாஜக. அர்ஜூன் முண்டாமுதல்வரானார்.
ஆனால், முண்டாவுக்கு ஆதரவாக அவரது அமைச்சர்கள் 4 பேரும் ஒருசுயேச்சையும் போர்க் கொடி உயர்த்தி அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற்றுள்ளதால்இப்போது அரசுக்கு வெறும் 36 உறுப்பினர்களே உள்ளனர். இதனால் பாஜகபெரும்பான்மையை இழந்துள்ளது.
முண்டா தலைமையிலான அரசை பாதுகாக்க டெல்லியில் பாஜக தலைவர்கள் தீவிரமுயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இந்த ஆட்சி கவிழ்வது உறுதி என்பதால்அடுத்ததாக ஆட்சி அமைக்கும் வேலைகளில் காங்கிரஸ் கூட்டணி இறங்கியுள்ளது.
இக் கூட்டணியைச் சேர்ந்த ஜார்க்கண்ட் முக்தி மோச்சாவுக்கு 17 எம்எல்ஏக்கள்உள்ளனர். இதனால் அக் கட்சியைச் சேர்ந்தவர் முதல்வராக வாய்ப்புள்ளது.
ஆனால், பாஜக ஆட்சிக்கு எதிராக கிளம்பிய அமைச்சர்களுக்கு ஆதரவாககளமிறங்கிய முக்கியமான சுயேச்சை எம்எல்ஏவான மதுகோடா தனக்கு முதல்வர்பதவியை கேட்கிறார். இதனால் அவர் முதல்வராகவும் வாய்ப்புள்ளது.
மதுகோடாவை முதல்வராக்க காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (இந்த கட்சிக்கு 7எம்எல்ஏக்கள் உள்ளனர்) ஆகியவை ஆதரவு தெரிவித்துவிட்டன. ஜார்க்கண்ட் முக்திமோர்ச்சா எம்எல்ஏக்களையும் சேர்த்து இப்போது இந்தக் கூட்டணிக்கு 43எம்எல்ஏக்கள் உள்ளதால் ஆட்சியமைப்பது எளிது.
கடந்த சட்டமன்றத் தேர்தலையடுத்து இழுபறியான நிலை உருவானதால் முதல்வர்பதவியில் அமர வைக்கப்பட்டார் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரான சிபுசோரன். ஆனால், அவரால் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியவில்லை.
இதனால் பதவி விலக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். பெரும்பான்மையேஇல்லாமல் ஆட்சியைப் பிடிக்க முயன்றதாக மத்தியில் ஆளும் காங்கிரஸ், மாநிலஆளுநர் ரிஸ்வி ஆகியோர் மீது பாஜக கடும் குற்றம் சாட்டியது.
இதையடுத்து பாஜக-ஐக்கிய ஜனதா தள கூட்டணி ஆட்சியமைத்தது. முதல்வர்பதவியிழந்த சிபு சோரன் மத்திய அமைச்சராக்கப்பட்டார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications