தமிழக, கர்நாடக முதல்வர்களை சந்திக்கும் காவிரி குடும்பம்
தஞ்சாவூர்:
காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநில விவசாயிகள்அடங்கிய காவிரிக் குடும்பம் அமைப்பு இரு மாநில முதல்வர்களையும் சந்திக்கமுடிவு செய்துள்ளது.
தமிழகம் மற்றும் கர்நாடக மாநில காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் சங்கங்கள்இணைந்து இந்த காவிரிக் குடும்பம் அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர்.இதுவரை இந்த அமைப்பின் சார்பில் இரு மாநிலங்களிலும் 7 முறை கூட்டங்கள்நடந்துள்ளன.
தஞ்சாவூரில் நேற்று இந்த அமைப்பின் 8வது ஆலோசனைக் கூட்டம் நடந்தது.பின்னர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான ஜனகராஜன் செய்தியாளர்களிடம்பேசுகையில்,
கடந்த 3 வருடமாக காவிரிக் குடும்பத்தைச் சேர்ந்த விவசாயிகள், வேளாண்துறை,நீர்ப்பாசனத்துறை நிபுணர்களுடன் ஆலோசனைகள் நடததியுள்ளோம். இதுவரை இருமாநில அரசுகளையும் நாங்கள் சந்திக்கவில்லை.
விரைவில் இரு மாநில முதல்வர்களையும் சந்திக்கவுள்ளோம். இந்தப் பிரச்சனை தீரஎங்களால் முடிந்த அளவுக்கு உதவுவோம்.
இரு மாநல விவசாயிகளும் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் காவிரி நடுவர்மன்றத்தின் இறுதித் தீர்ப்பு இன்னும் வெளியாகமாமல் இருப்பது வருத்தம் தருகிறதுஎன்றார்.












Click it and Unblock the Notifications