நிலம்- அன்பழகன் மீது திமுக தொண்டர் வழக்கு
கரூர்:
திமுக அலுவலகம் அமைப்பதற்காக தனியார் நிலத்தை ஆக்கிரமித்ததாகநிதியமைச்சர் அன்பழகன் மீது கரூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கரூர் மாரியம்மன கோவிலின் பரம்பரை அறங்காவலராக இருப்பவர்முத்துக்குமார்.இவரது தந்தை குழந்தைவேல் பிள்ளை. இவருக்கு நீலிமேடு என்ற இடத்தில் 26சென்ட் நிலம் உள்ளது. இதில் 5 சென்ட் நிலத்தை வீரப்ப முதலியார் என்பவருக்குவாடகைக்கு விட்டார்.மீதம் உள்ள 21 சென்ட் நிலத்தை 1971ம் ஆண்டு அறிஞர் அண்ணா பூங்காஅமைப்பதற்காகவும், கரூர் மாவட்ட திமுக அலுவலகம் அமைக்கவும் அளித்தார்.இதற்காக திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி பெயரில் 99 ஆண்டுகுத்தகைக்கு கொடுத்தார்.
இந் நிலையில் கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி அறங்காவலர்முத்துகுமார், 26 சென்ட்நிலத்தையும், திமுக மாவட்ட அலுவலகம் கட்ட கட்சியின் பொதுச் செயலாளரானஅமைச்சர் அன்பழகன்னுக்கு தானமாக எழுதிக் கொடுத்து விட்டார்.
இதைத் தொடர்ந்து கரூர் எம்.பி. கே.சி.பழனிச்சாமியும், மாவட்டச் செயலாளர் வாசுகிமுருகேசனும் இடத்தை பார்வையிட்டனர். அப்போது 5 சென்ட் நிலத்தைவைத்திருந்த வீரப்ப முதலியார் மகனும், வட்ட திமுக செயலாளருமான குமார்மற்றும் அவரது சகோதரி ஆகியோர் நீண்டகாலமாக அந்த இடத்தில் வசித்து வந்ததுதெரியவந்தது.
இதையடுத்து அவர்களை அங்கிருந்து காலி செய்யுமாறு வாசுகி முருகேசன்கூறியுள்ளார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த குமார் இதுதொடர்பாக கரூர்மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜோசப் ஜாய் வரும் 20ம் தேதி அமைச்சர் அன்பழகன்,கே.சி.பழனிச்சாமி எம்.பி. ஆகியோர்நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறுஉத்தரவிட்டார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications