கலாம் விமானத்துக்கு மிரட்டல்-5 பேர் சிக்கினர்
சென்னை:
ஜனாதிபதி அப்துல் கலாம் செல்லவிருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்விடுத்ததாக 5 பேர் கொண்ட கும்பலை போலீஸார் மடக்கியுள்ளனர்.
சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்திருந்த அப்துல் கலாம்,திங்கள்கிழமை இரவு 11.45 மணிக்கு டெல்லிக்குத் திரும்புவதாக இருந்தார்.இந் நிலையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு மிரட்டல் தொலைபேசிவந்தது. அதில் பேசிய நபர் ஆளுநரின் விமானத்தில் குண்டு வைக்கப்படிருப்பதாகக்கூறினார். ஆளுநர் சென்னையில் தானே இருக்கிறார், அவர் எங்கும்போகவில்லையே என போலீசார் குழம்பினர்.
இதையடுத்து மீண்டும் போன் செய்த அந்த நபர் ஆளுநரின் விமானம் அல்லகுடியரசுத் தலைவர் விமானத்தில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.குடித்து விட்டு பேசுவது போல அவரது பேச்சு இருந்துள்ளது. இரண்டாவதுமுறைஅந்த நபர் பேசிய போது, செல்போன் மூலம் பேசியுள்ளார்.
இதனால் விமான நிலையமே அதிர்ச்சியில் மூழ்கியது. டிஜிபி முகர்ஜி, மாநகரஆணையர் லத்திகா சரண் ஆகியோர் விமான நிலையம் விரைந்தனர். வெடிகுண்டுநிபுணர்கள் மோப்ப நாய்கள் சகிதம் விமானத்தில் சோதனை நடத்தியதில் குண்டுஎதுவும் சிக்கவில்லை.
இதையடுத்து அதிகாலை 2 மணிக்கே கலாம் டெல்லி கிளம்பிச் சென்றார். குடியரசுத்தலைவர் விமானத்துக்கே வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது மத்தியஉளவுத்துறை போலீஸாருக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
மிரட்டல் விடுத்தவர்களைப் பிடிக்க மாநில சைபர் கிரைம் போலீஸாரும் மத்தியஉளவுப் பிரிவினரும் களமிறங்கினர்.
மிரட்டல் தொலைபேசி வந்த எண்ணைமுதலில் கண்டுபிடிக்கமுடியவில்லை.காரணம், வெறும் 800 என்ற எண் மட்டுமே காலர் ஐ.டியில் பதிவாகி இருந்தது. அதுடாடா இன்டிகாம் போனில் இருந்து வந்தது தெரியவந்தது.
அதை வைத்து டாடா இன்டிகாம் என்ஜியர்களின் உதவியோடு சம்பந்தப்பட்டஎண்ணை போலீஸார் கண்டுபிடித்தனர்.
அதை வைத்து சென்னை புறநகர்ப் பகுதியான கூடுவாஞ்சேரி அருகே உள்ளஅய்யஞ்சேரி ஊரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், ராஜு, ராஜன், சுரேஷ்,பாலமுருகன் ஆகியோரை வளைத்துப் பிடித்தனர். இவர்களில் ஒருவர் தான் மிரட்டல்விட்டவர் என்று போலீசார் கருதுகின்றனர்.
இவர்களை ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications