அதிமுக ஆட்சியில் தான் போலீஸ் அதிகாரிகள் அதிகம் பேர் மாற்றப்பட்டனர்:கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அதிமுக ஆட்சியில் தான் காவல்துறை அதிகாரிகள், உயர் அதிகாரிகள் அதிகம் பேர்,அடிக்கடி மாற்றப்பட்டனர் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சி பொறுப்பேற்றபிறகு அதிக அளவில் அதிகாரிகள் மாற்றப்படுவதாக புகார் கூறுவதில் உண்மைஇல்லை என்பதை ஏற்கனவே சட்டசபையில் விளக்கியுள்ளேன். முந்தைய ஆட்சியில்ஒவ்வொரு துறையிலும் எத்தனை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இப்போது எவ்வளவு பேர்மாற்றப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை பட்டியலிட்டுக்கூறினேன். இந்த அளவுக்கு திமுக ஆட்சியில் மாறுதல் செய்வதற்கு காரணம் உண்டு.முந்தைய அதிமுக ஆட்சியில் பதவி உயர்வுக்கான கோப்புகள், கையெழுத்திடாமல்வைக்கப்பட்டிருந்தன.

இப்போது அதில் எல்லாம் கையெழுத்திட்டதால் 70க்கும் மேற்பட்டஇன்ஸ்பெக்டர்கள் டி.எஸ்.பிக்களாக பதவி உயர்வு பெற்றனர். அவர்களுக்கு புதியஇடங்களில் பணி வழங்க நேரிட்டது.

தாழ்த்தப்பட்ட சமுதாயததில் பிறந்த காளிமுத்து, சென்னை ஆணையராக இருந்தார்.திமுக ஆட்சியில் அவர் அப்பதவியில் இருந்தார் என்பதற்காக அவரைசாதாரணமான, அதிகாரமற்ற பதவியிலே அமர்த்தியதோடு மட்டுமின்றி, டிஜிபி பதவிஉயர்வு கோப்பிலே கையெழுத்திட்டால் அவருக்கு டிஜிபி பதவி உயர்வு தர நேரிடும்என்பதால் கோப்பிலேயே கையெழுத்திடாமல் வைத்திருந்தார்கள்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் அவருக்கு டிஜிபி அந்தஸ்தில் பதவி தரப்பட்டது.சந்தனக்கடத்தல் வீரப்பனை பிடித்ததற்காக 700க்கும் மேற்பட்ட காவல்துறையினருக்கு வீடுகளும், பரிசுகளும் வழங்கப்பட்ட போதும் கூடகாளிமுத்துவுக்கு எதுவும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த கால ஆட்சியில் திமுக ஆட்சியின் போது டிஜிபியாக இருந்தவரை மாற்றிவிட்டு ரவீந்தர்நாத் நியமிக்கப்பட்டார். அவரையும் ஒரு மாதம் கூட நீடிக்க விடவில்லை. அவரை தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். எங்குமே இல்லாதவகையில், டிஜிபியையே தற்காலிக பணி நீக்கம செய்த பெருமை ஜெயலலிதாவுக்குமட்டுமே உண்டு.

இதேபோல உள்துறை செயலாளராக தன்னிடம் பணியாற்றி ஜெயலலிதா ஆட்சியில்மாறுதல் மட்டும் செய்யவில்லை. தற்காலிக பணி நீக்கம் செய்து தனது ஆட்சிக்காலம் வரையிலும், பதவி வாய்ப்பு கொடுக்காமல் வைத்திருந்த பெருமையும்ஜெயலலிதாவுக்கு உண்டு.

சென்னை மாநகர ஆணையராக இருந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வரை சிலமாதங்கள் வரையில், அதாவது என்னைக் கைது செய்து சிறையில் அடைக்கும்வரையில் பயன்படுத்தி விட்டு, பிறகு அவரையும் தற்காலிக பணி நீக்கம் செய்துவீட்டுக்கு அனுப்பியது, முந்தைய ஆட்சி என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+