புலிகளை ஆதரிக்கும் வைகோவை கூட்டணியில்இருந்து நீக்க ஜெ. தயாரா?: கிருஷ்ணசாமி
சென்னை:
விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் வைகோவை கூட்டணியில் இருந்து நீக்க அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா தயாரா என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது,வைகோ மூலமாக விடுதலைப் புலிகளுடன் ஜெயலலிதா தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகம் ஏற்படுகிறது என்றுசிதம்பரத்தில் நான் பேசினேன். 2 நாட்கள் அமைதியாக இருந்த ஜெயலலிதா ஆண்டிப்பட்டிக்கு சென்று நான்கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் பழைய சம்பவங்களை பற்றி பேசி இருக்கிறார்.
அவர் ஆட்சியில் இருந்த போது விடுதலைப் புலிகளை ஆதரிப்பதாக பேசிய வைகோவை பொடா சட்டத்தில்கைது செய்து சிறையில் அடைத்தார். மதிமுகவை தடை செய்ய வேண்டும் என்று கூறினார். இப்போது வைகோவிடுதலைப் புலிகளை ஆதரிப்பதாக கூறுகிறார்.
ஆனால் ஜெயலலிதா வைகோவை கண்டித்தாரா? ஆட்சியில் இருக்கும் போது ஜெயலலிதா விடுதலைப் புலிகளைஎதிர்ப்பதாக தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டார். இப்போது ஆட்சியில் இல்லை. ஆனால் அமைதிகாத்துக்கொண்டு இருக்கிறார்.
வைகோவை அன்பு சகோதரர் என்று சொல்கிறார். வயதில் மூத்த அவரை அப்படிசொல்லட்டும். ஆனால் 83 வயது நிரம்பிய கலைஞரை அழகு சுந்தரம் என்று கேலிசெய்திருக்கிறார். இது சரியா?
இன்று விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் வைகோவை இவர் தடுக்காதது ஏன்? இதுஎங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ராஜீவ்காந்தி படுகொலைசெய்யப்படுவதற்கு முன்பு விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளை ஜெயலலிதாசந்தித்து பேசினார். ஆனால் இதுவரை அது பற்றி எந்த விளக்கமும் அவர்அளிக்கவில்லை. நான் கேட்ட கேள்விக்கும் பதில் சொல்லவில்லை.
ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட போது அவர் தமிழ்நாட்டுக்கு வருவதுபாதுகாப்பு இல்லை என்று கருதித்தான் அவருடன் ஒரே மேடையில் பேசும்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் ஜெயலலிதா புறக்கணித்தார் என்றுசட்டசபையிலேயே தம்பித்துறை பேசி இருக்கிறார்.
ராஜீவ் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பதை நீங்கள் முன்பே தெரிந்திருந்தால்அதனை தடுக்கும் முயற்சியில் ஏன் ஈடுபடவில்லை. இதையெல்லாம் ஆராயும்போதுதான் உங்கள் மீது சந்தேகம் ஏற்படுகிறது. இதற்கான பதிலை எப்போதுசொல்வீர்கள். உங்கள் ஆதரவுடன் நெய்வேலியில் உண்ணாவிரதம் இருந்த டைரக்டர்பாரதிராஜாவும், இலங்கை சென்று பிரபாகரனை சந்தித்திருக்கிறார். அதற்கும் பதில்சொல்ல வேண்டும்.
2004ல் வைகோ காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோது ஒரு இடத்தில் கூடவிடுதலைப் புலிகளை ஆதரித்து பேசவில்லை. ஆனால் இப்போது பேசுவது உங்கள்ஆதரவால்தானா? நீங்களும் தீவிரவாதத்துக்கு துணை போகிறீர்களா? விடுதலைப்புலிகளுடன் உங்களுக்கு தொடர்பு இல்லை என்றால் அதற்கு ஆதரவு கொடுப்பதாககூறும் வைகோவை அதிமுக கூட்டணியில் இருந்து விலக்க தயாரா?
பாமக எங்களுடன் உறவு வைத்திருக்கும் போது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகபேசவில்லை. தமிழர்களுக்கு ஆதரவாகத்தான் பேசுகிறார்கள்.
வீரப்ப மொய்லியை ராமதாஸ் குறை கூறியிருக்கிறார். அது தவறு. மதிமுகவை மத்தியகூட்டணியில் இருக்கும் படி நாங்கள் வற்புறுத்தவில்லை. அவர்களதுநடவடிக்கைகளை மேலிடத்துக்கு தெரிவிப்போம்.
தமிழ்நாட்டில் காங்கரஸ் சார்பில் கோபி செட்டிபாலையம், நெல்லை, வேலூர் அல்லதுஏதாவது ஒரு மாவட்டம் உள்பட 3 இடங்களில் மண்டல மாநாடுகளை நடத்த முடிவுசெய்திருக்கிறோம். இதற்கு சோனியாவிடம் தேதி கேட்டுள்ளோம் என்றார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications