தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் எச்சரிக்கை
டெல்லி:
நாடு முழுவதிலும் உள்ள முக்கிய இடங்களை தற்கொலைப் படைதாக்குதல் மூலம்தாக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதால் அனைத்து மாநில அரசுகளும் உஷார்நிலையில் இருக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் எச்சரித்துள்ளார்.
டெல்லியில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனைநடத்தினார். இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல்உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் தீவிரவாதிகளின் தாக்குதல்கள்தொடர்பாக முதல்வர்களுடன் விரிவாக விவரித்தார். பிரதமர் இக் கூட்டத்தில்பேசுகையில், நாடு முழுவதும் முக்கிய இடங்களில் அதாவது வழிபாட்டுத் தலங்கள்,பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், முக்கிய கல்வி நிறுவனங்கள்,ஆய்வு நிறுவனங்கள், அணு உலைகள், ராணுவ முகாம்களில் தற்கொலைப் படைமூலம் தாக்குதல் நடத்த வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இதுதொடர்பானமுக்கிய தகவல்கள் மத்திய உளவுத்துறைக்குக் கிடைத்துள்ளது.எனவே அனைத்து மாநில முதல்வர்களும் தங்களது மாநிலங்களில் உள்ள இந்தமுக்கிய இடங்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். மாநிலம் முழுவதும்காவல்துறை உஷார் நிலையில் வைக்கப்பட வேண்டும்.
பெரிய தீவிரவாத அமைப்புகள் தவிர சிறிய அளவில் இயங்கும் தீவிரவாதஅமைப்புகளையும் கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். உள்ளூர் போலீஸாரும், உளவுத்துறையினரும் தங்களுக்குக் கிடைக்கும்தகவல்களை உரிய முறையில் பரிமாறிக் கொண்டு ஒருங்கிணைந்து செயல் படவேண்டும்.
காவல்துறையினர் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். சிறந்தகாவலர்கள் இருக்கும் மாநிலத்தில் தீவிரவாத செயல்களை வெகுவாக கட்டுப்படுத்தமுடியும். காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை விரைவில் நிரப்பமாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புலனாய்வு அமைப்புகளை நவீனப்படுத்த வேண்டியதும் அவசியமாகும். இதில்கம்ப்யூட்டர் மயமாக்கம் மிகவும் அத்தியாவசியமானது. சேகரிக்கப்படும்தகவல்களை நாடு முழுவதும் உள்ள பாதுகாப்பு அமைப்புகளோடு பகிர்ந்து கொள்ளஇது உதவும் என்றார் பிரதமர்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications