ஓசூரில் தவிக்கும் 165 இலங்கை அகதிகள்!

Subscribe to Oneindia Tamil

ஓசூர்:

ஓசூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கும் 165இலங்கை அகதிகள் சரியான சாப்பாடு கூட இல்லாமல் கடந்த 10 நாட்களாகபரிதவித்து வருகின்றனர்.

இலங்கை அகதிகள் 330 பேர் கடந்த மாதம் 27ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்துக்குஅழைத்து வரப்பட்டனர். இவர்களில் 50 குடும்பங்களைச் சேர்ந்த 165 பேர் ஓசூருக்குகொண்டு வரப்ப்பட்டனர். அங்குள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

கொண்டு வரப்பட்ட முதல் நாள் மட்டும் இவர்களுக்கு சாப்பாடுவழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அதிகாரிகள் யாரும் வரவில்லை என்றுதெரிகிறது. இவர்களின் நிலையைப் பார்த்து பரிதாபப்பட்ட ரோட்டரி சங்கம் மற்றம்அரிமா சங்கத்தினர் தேவையான சாப்பாடு, மண்ணெண்ணை, அடுப்பு, பாத்திரங்கள்ஆகியவற்றை வழங்கியுள்ளனர்.

மேலும் ஓசூரில் உள்ள டைட்டன் நிறுவனம், அசோரக் லேலண்ட் நிறுவனதொழிலாளர்களும் தங்களால் முடிந்த உதவிகளைசெய்து வருகிறார்கள். கடந்த 10 நாட்களாக அதிகாரிகள் யாரும் இங்கு வரவில்லை.எங்களுக்குத் தடுப்பூசியும் போடப்படவில்லை.

டைட்டன் மற்றும் அசோக் லைலண்ட் நிறுவன ஊழயிர்கள் தான் எங்களுக்கு உதவிவருகின்றனர். தங்களது ஓய்வு நேரங்களில் எங்களிடம் வந்து பேசி ஆறுதல் கூறிவிட்டுச் செல்கின்றனர். எங்களுக்காக மருத்துவ முகாம் நடத்தவும் அவர்கள் முடிவுசெய்தனர். ஆனால் அதற்கு அனுமதி வழங்க வருவாய்த்துறை மறுத்து விட்டதுஎன்று அகதி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து ஓசூர் தாசில்தார் ரஹூப்ஜான் கூறுகையில், அரசிடமிருந்து பணம்வராததால் தான் அகிதகளுக்கு வழங்கப்பட வேண்டிய பணம் தரப்படவில்ல.பணம் வந்தவுடன் அகிதகளுக்கு கொடுக்க வேண்டிய தலா ரூ. 1000 பணம்வழங்கப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+