தமிழ் வழிக் கல்வியை எதிக்கும் மலையாள சங்கம்
மதுரை:
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு வரை கட்டாயம் தமிழ் பயில வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்துகன்னியாகுமரி மாவட்ட மலையாள சமாஜம் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட மலையாள சமாஜ் தலைவர் சந்திரசேகரன் பிள்ளை தாக்கல் செய்துள்ளமனுவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல பள்ளிகளில் மலையாள மொழியிலேயே பாடம்நடத்தப்படுகிறது. அதேபோல தமிழகத்தில் உள்ள பல பள்ளிகளில் தெலுங்கு, கன்னடம், உருது ஆகியமொழிகளில் பாடம் நடத்தப்படுகிறது.கல்வி என்பது இந்திய அரசியல் சட்டத்தின் படி அடிப்படை உரிமையாகும். அதேபோல மொழிச்சிறுபான்மையினர் அவரவர் தாய்மொழியிலேயே கல்வி கற்றுக்கொள்ளலாம் என்பதும் அடிப்படைஉரிமையாகும்.
ஆனால் இவற்றை கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசு தமிழை கட்டாயப் பாடமாக்கி சட்டம் கொண்டுவந்துள்ளது. இதன்படி இந்த ஆண்டு முதல் கட்டாய தமிழ் சட்டம் அமலுக்கு வருகிறது. இச்சட்டத்தின் படி முதல்பாடமாக தமிழ், 2வது பாடமாக ஆங்கிலம், 3வது பாடமாக அவரவர் தாய் மொழியில் படிக்கலாம் எனகூறப்பட்டுள்ளது.
இது அரசியல் அமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைக்கு எதிரானதாகும். எனவே இந்தசட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இந்த மனு விசாரணையில் நிலுவையில் இருக்கும் வரை அந்த சட்டத்தைஅமல்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் மிஸ்ரா, வெங்கட்ராமன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இது தொடர்பாக விளக்கமனுவை தாக்கல் செய்யுமாறு கூறி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
கர்நாடக பகுதியில் தமிழ் பள்ளிகள் மூடல்:
இதற்கிடையே ஒகேனக்கல் அருகே கர்நாடக பகுதியில் மூடப்பட்டுள்ள தமிழ் பள்ளிக் கூடங்களை உடனடியாகதிறக்க வேண்டும் என இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ரவி, தர்மபுரி மாவட்ட செயலாளர் மு.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில்,
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை ஓட்டியுள்ள ஆலாம்பட்டி, தட்டாறு, பாலாறு, மாடுகொட்டாய் போன்றபகுதிகளில் தமிழ்வழி கல்வி பள்ளிகள் இருந்து வந்தன. இப் பள்ளிகளை கர்நாடக கல்வித்துறை அதிகாரிகள்மூடிவிட்டனர். இதனால் அப்பகுதியில் குழந்தைகள் கல்வி கற்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
தமிழ் மக்கள் இரண்டாம் தர குடிகளாக நடத்தப்படுவதை கண்டு வேதனைப்படுகிறோம். ஆகவே கர்நாடகஅரசும், அதிகாரிகளும் உடனடியாக தமிழ் பள்ளிக் கூடங்களை திறக்க நடவடிக்கை எடுத்து தமிழ் மக்கள் கல்விபயில வழி காண கேட்டுக் கொள்கிறோம் என கூறியுள்ளனர்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications