2 மணிப்பூர் தீவிரவாதிகள் கோவையில் கைது!
கோவை:
கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணிப்பூரைச் சேர்ந்த 2 தீவிரவாதிகளை மணிப்பூர்போலீஸார் கைது செய்துள்ளனர்.
மணிப்பூரை பிரித்து தனி நாடாக ஆக்க வேண்டும் என்று கோரி ஐக்கிய தேசிய விடுதலைப் படை என்றஅமைப்பு போராடி வருகிறது. இதே அமைப்புடன் இணைந்த மக்கள் விடுதலைப் படை என்ற அமைப்புதீவிரவாத செயல்களிலும் ஈடுபட்டு வருகிறது.இவற்றை பயங்கரவாத அமைப்பாக மணிப்பூர் அரசு அறிவித்து அவற்றுக்கு தடை விதித்துள்ளது. இந்தஇயக்கத்தினரின் செயல்பாடுகளை மணிப்பூர் போலீஸார் மற்றும் ராணுவம் ரகசியமாக கண்காணித்து வருகிறது.
இந்த நிலையில், இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் தோம்பா என்பவர் கோவை கங்கா மருத்துவனையில்ரகசியமாக சிகிச்சை பெற்று வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணுவம், மணிப்பூர் போலீஸாரும்தோபாவை பிடிக்க வலை விரித்தன்.
மாறு வேடத்தில் கோவை வந்த அவர்கள், தோபா அங்கு சிகிச்சை பெற்று வருவதை உறுதி செய்து கொண்டனர்.இதைத் தொடர்ந்து மருத்துவமனையை முற்றுகையிட்ட அவர்கள் தோபாவை கைது செய்தனர். அவருடன்சிகிச்சை பெற்று வந்த சலாம் மங் என்கிற இன்னொரு தீவிரவாதியும் பிடிபட்டான்.
50 கோவை போலீஸார் உதவியுடன் இரு தீவிரவாதிகளையும் மணிப்பூர் போலீஸாரும், ராணுவ அதிகாரிகளும்வளைத்துப் பிடித்தனர். இவர்கள் இடமிருந்து 35,000 பணம், 2 செல்போன்கள், லேபடாப் கம்ப்யூட்டர்கள்,புகைப்படங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்ட இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.அவர்களை மணிப்பூர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவையில் ரகசியாக சிகிச்சைபெற்று வந்த தீவிரவாதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தோம்பா முதுகு வலியில் அவதிப்பட்டு வந்தான். இதற்கு சிகிச்சை பெறுவதற்காக முதலில் பெஙகளூர்சென்றான். அங்கிருந்து வேலூர் வந்தான். அங்கு சிகிச்சை பெறுவதை விட கோவயில் உள்ள கங்காமருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் நல்லது என்று தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து கங்காமருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று வந்தான்.
போட்டோம் என்ற பெயரில் மருத்தவமனையில் சேர்ந்த தோம்பா சிகிசசை பெற்று வந்தான். இவன் தீவிரவாதிஎன்பது மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரியாது என்று கூறப்படுகிறது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications