சீன மருத்துவ படிப்பு இனி இந்தியாவில் செல்லாது
பெய்ஜிங்:
சீன மருத்துவக் கல்லூரிகளில் போதிக்கப்படும் மருத்துவப் படிப்புகளுக்கானஅங்கீகாரத்தை இந்தியமருத்துவ கவன்சில் ரத்து செய்துள்ளதால், சீனாவில் மருத்துவம்பயின்று வரும் இந்திய மாணவர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளில் சீட் கிடைக்காதவர்கள் சீனா, ரஷ்யா உள்ளிட்டநாடுகளில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து பயின்று வருகின்றனர்.இந்தியாவில் தனியார் மருத்துவக் கல்லூரிகளைவிட இங்கு போய் படிப்பது செலவுகுறைவானது.இதனால் பெரும் எண்ணிக்கையிலான இந்திய மாணவர்கள், குறிப்பாக தமிழகமாணவர்கள் இங்கு போய் படிக்கின்றனர்.
ஆனால், இந்த நாடுகளில் உள்ள பல மருத்துவக் கல்லூரிகள் வழங்கும் பட்டங்களைஇந்திய மருத்துவக் கவுன்சில் அங்கீகரிப்பதில்லை. இந்தக் கல்லூரிகளின் தரக்குறைவான போதனை முறையும், பட்டம் வழங்குவதில் உள்ள சிலமுறைகேடுகளுமே இதற்குக் காரணம்.
இந் நிலையில் சீனாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் வழங்கும் பட்டங்கள்செல்லாது என்று இந்திய மருத்துவக் கவுன்சில் திடீரென அறிவித்துள்ளது. இதனால்தற்போது சீனாவில் மருத்துவம் பயின்று வருவோரும், புதிதாக சேர விருப்பம்கொண்டுள்ளோரும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சீனாவில் உள்ள சில மருத்துவக் கல்லூரிகளில் போதுமான அடிப்படை கட்டமைப்புஇல்லை என்றும், ஆங்கிலம் பேசும் பேராசிரியர்கள் பல கல்லூரிகளில் இல்லைஎன்றும், இதனால் இந்திய மாணவர்களால்முழுமையாக மருத்துவம் பயில முடியாதநிலை இருப்பதாகவும், இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு அண்மையில், சீனாவுக்கானஇந்திய தூதர் அறிக்கை அனுப்பியிருந்தார்.
அவர் அனுப்பிய அறிக்கையின் அடிப்படையில் இந்திய மருத்துவக் கவுன்சில் இந்தமுடிவை எடுத்துள்ளது.
தற்போது சீனாவில் உள்ள 20 மருத்துவக் கல்லூரிகளில் 6,000க்கும் மேற்பட்ட இந்தியமாணவ, மாணவியர் மருத்துவம் பயின்று வருகின்றனர்.
சீன மருத்துவக் கல்லூரிகளில் முன்பு ஆங்கிலம் பயன்பாட்டில் கிடையாது. சீனமொழியான மாண்டரீன் தான் போதனா மொழியாக இருந்து வந்தது. ஆனால்வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்க கடந்த 2004ம் ஆண்டு முதல் ஆங்கிலமீடியத்திலும் போதனை தொடங்கப்பட்டது.
இதனால் இந்தியாவிலிருந்து அதிக அளவிலான மாணவ, மாணவியர் சீனாவுக்குபடையெடுக்க ஆரம்பித்தனர். ஆனாலும் அங்கு ஆங்கில போதனையும் முழுமையாகஇல்லை என்று கூறப்படுகிறது.
சமீபத்தில், சீன மருத்துவக் கல்லூரிகள் தரும் பட்டம் இந்தியாவில் செல்லும் என்றுஆந்திர மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் மாணவர்கள் ஓரளவுநிம்மதியடைந்திருந்தனர்.
இருப்பினும், சீன மருத்துவப் படிப்பை படிக்க விரும்புவோருக்கு இந்திய வங்கிகள்கடன் தர முன் வருவதில்லை. இந் நிலையில் இந்திய மருத்துவக் கவுன்சில் புதியகுண்டைத் தூக்கிப் போட்டுள்ளதால் இந்திய மாணவர்கள் பெரும் அதிர்ச்சிஅடைந்துள்ளனர்.
ஆண்டுதோறும் இந்தியாவிலிருந்து குறிப்பாக தென்னிந்தியாவிலிருந்து (அவர்களில்பெரும்பாலனோர் ஆந்திர மாநிலத்தவர்) 2,000 முதல் 3,000 மாணவ, மாணவியர்சீனாவில் மருத்துவம் பயில விண்ணப்பிக்கின்றனர்.
இவர்களில் முக்கால்வாசிப்பேர் நடுத்தர குடும்பங்க்ளைச் சேர்ந்தவர்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications