வைகோ மீது காங். எம்.எல்.ஏ. போலீஸில் புகார்
வேலூர்:
விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீதுநடவடிக்கை எடுக்கக் கோரி வேலூர் காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் மதிவாணனை நேரில் சந்தித்துஞான சேகரன் அளித்துள்ள புகாரில், கடந்த 4ம் தேதி வேலூரில் மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. அதில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,விடுதலைப்புலிகளை நேற்றும் ஆதரித்தோம், இன்றும் ஆதரிக்கிறோம், நாளையும்ஆதரிப்போம் என பேசியுள்ளார்.விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. அதன் தலைவர்பிரபாகரன், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் முதல் குற்றவாளி.அவரை ஆதரித்து வைகோ வெளிப்படையாக சென்னை, ஆரணி போன்ற இடங்களில்பேசியுள்ளது தேச விரோத குற்றமாகும்.
வேலூரில் அவர் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். தேச விரோதகுற்றமாகும். எனவே வைகோ மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கைகாக்க வேண்டுமென்று கூறியுள்ளார் ஞானசேகரன்.
இதேபோல முதல்வர் கருணாநிதிக்கும் ஞானசேகரன் ஒரு புகார் மனுவைஅனுப்பியுள்ளார். ஏற்கனவே சென்னையில் பேசியதற்காக வைகோ மீது நடவடிக்கைஎடுக்க கோரி காங்கிரஸ் பிரமுகர் பால் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குபோட்டுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications