இந்திய கிரிக்கெட் வீரர்கள் சென்னை வருகை
சென்னை:
மலேசியா செல்லவுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் நடைபெறவுள்ள பயிற்சி ஆட்டங்களில்கலந்துகொள்வதற்காக சென்னைக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் செப்டம்பர் மாதம் தொடங்கும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில்இந்தியா பங்கேற்கிறது. இத்தொடரில் இந்தியா தவிர ஆஸ்திரேலிய மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணியும்பங்கேற்கின்றன.இதில் கலந்த கொள்ள இந்திய அணிக்கு பெங்களூரில் சமீபத்தில் பயிற்சி முகாம் நடந்தது. இதைத் தொடர்ந்துசென்னையில் இந்திய அணி 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாடவுள்ளது.முதல் பயிற்சி ஆட்டம் நாளையும், 2வது ஆட்டம் நாளை மறு நாளும் நடைபெறவுள்ளன. சேப்பாக்கம் சிதம்பரம்ஸ்டேடியத்தில் இந்த பயிற்சி ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
இதில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் சென்னைக்கு வர ஆரம்பித்துள்ளனர். முதல் வீரராக விக்கெட்கீப்பர் மகேந்திர சிங் தோணி இன்று சென்னை வந்தார். மும்பையிலிருந்து சென்னை வந்த அவர் நேராக தாஜ்கன்னிமாரா ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்குப் பின்னர் பந்து வீச்சாளர்கள் இர்பான்பதானும், முனாப் பட்டேலும் மும்பையிலிருந்து சென்னை வந்தி சேர்ந்தனர்.
மற்ற வீகர்கள் இன்று மாலை பெங்களூரிலிருந்து சென்னைக்கு வரவுள்ளனர். பயிற்சி ஆட்டங்களில் இந்தியஅணியுடன், தமிழ்நாடு கிரிக்கெட் அணி மோதவுள்ளது. பயிற்சி ஆட்டங்களை பகல் நேர போட்டியாகநடத்துவதா அல்லது பகல் இரவு போட்டியாக நடத்துவதா என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.
பயிற்சி ஆட்டங்களை முடித்துக் கொண்டு 10ம் தேதி இந்திய அணி கோலாலம்பூர் புறப்பட்டு செல்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications