சேலம் அரசு மருத்துவமனை- டாக்டர்களுடன் மோதல்: மன்னிப்பு கேட்ட டீன்
சேலம்:
சேலம் அரசு மருத்துவமனையின் டீன் மற்றும் டாக்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. தாசில்தார் தலைமையில்நடந்த பேச்சுவார்த்தையில், டீன் மன்னிப்பு கேட்டதால் மோதல் முடிவுக்கு வந்துள்ளது.
சேலம் அரசு மருத்துவமனை டீன் அனுசுயா அறுவை சிகிச்சை பிரிவுக்கு நேற்று முன் தினம் ரோந்து சென்றபோது அப்பகுதி சுகாதாரக்கேடு மிக்கதாக இருந்துள்ளது. இதனால் அறுவை சிகிச்சை பிரிவு டாக்டர்செந்தில்குமாரை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். அத்துடன் பெண் டாக்டர் திரேஸா மேரியை தாக்கியுள்ளார்.இச்சம்பவம் மருத்தவமனை டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.இச்சம்பம் குறித்து தமிழ்நாடு டாக்டர்கள் சங்கத்தின் மாநில தலைவர் பிரகாசம் தலைமையில், சேலம் அரசுமருத்துமனை டாக்டர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் பாதிக்கப்பட்ட டாக்டர்களிடம் டீன் அனுசுயா நேற்று காலை 9 மணிக்குள் மன்னிப்பு கேட்கவேண்டும். அப்படி மன்னிப்பு கேட்கவில்லை என்றால் தமிழகம் முழுவதும் டாக்டர்கள் போரட்டத்தில் குதிப்பதுகுறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
![]() |
| போராட்டத்தில் டாக்டர்கள் |
நேற்று காலை வரை மன்னிப்பு கேட்காததால் காலை 9 மணி முதல் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க தலைவர்பிரகாசம் தலைமையில் சேலம் அரசு மருத்துவமனையின் அனைத்து ஊழியர்களும் ஒரு மணி நேரம்ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம் தாசில்தார் ஸ்ரீரெங்கநாதன், உதவி கமிஷ்னர்கள் வேலாயுதம், ஈஸ்வர் ஆகியோர் தலைமையில்இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு மருத்துவமனைஅனைத்து சங்க நிர்வாகிகள் முன்னிலையில், பாதிக்கப்பட்ட டாக்டர்கள் இருவரிடம், டீன் அனுசுயா மன்னிப்புகேட்டார். இதனால் டாக்டர்கள் நடத்த விருந்த போராட்டம் கைவிடப்பட்டது.
அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் மற்றும் அனைத்து பிரிவு ஊழியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் சிகிச்சைபெற வந்த நோயாளிகள் சிரமத்துக்கு உள்ளாகினர்.
இதுகுறித்து டீன் அனுசுயா கூறியதாவது, இப்பிரச்னைக்கு அரசிடம் அனுமதி பெற்று உங்களிடம் பேசுகிறேன்.எம்எல்ஏ உதயசூரியனனின் உறவினர் கள்ளக்குறிச்சியை சேர்ந்த சின்னத்தாய், அறுவை சிகிச்சை பிரிவில்சேர்க்கப்பட்டு இருப்பதாகவும், அவரை பார்வையிட அமைச்சர் வருவதாக மருத்துவமனை கண்காணிப்பாளர்சண்முகம் எனக்கு தகவல் கொடுத்தார்.
இதனால் ஹைதராபாத் சென்று இருந்த நான் உடனடியாக திரும்பி வந்து, மருத்துவமனையின் அறுவை சிகிச்சைபிரிவுக்கு வந்து பார்த்தேன். அப்போது அங்கு சுகாதாரக்கேடு மிக்கதாக இருந்தது. அங்கு பொறுப்பில் இருந்தடாக்டர்களிடம் இது குறித்து விளக்கம் கேட்டு ஆலோசனை வழங்கினேன்.
இதை அவர்கள் தவறாக புரிந்து கொண்டு, என் மீது புகார் தெரிவித்து விட்டனர். சேலத்தில் நான் பணி புரிந்தமூன்று ஆண்டுகளில் எந்த ஊழியர் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. இச்சமப்பவதில் யாரையும் நான்தாக்கவில்லை. ஒரு வேலை என் இடத்தில் இருந்தவர் ஆணாக இருந்தால், அந்த பெண் டாக்டர் தன்னைகற்பழித்து விட்டதாக கூட சொல்வார்.
மருத்துவர்கள் கடமையை செய்ய சொன்னால் அதற்கு என் மீது குற்றம் சொல்கின்றனர். நான் சொல்லவேண்டியதை எல்லாம் அக்டோபர் 31ம் தேதி அன்று உங்களிடம் சொல்வேன்.
எங்கள் குடும்பத்தில் (அரசு மருத்துவனையில்) சிறு சலசலப்பு ஏற்பட்டு வந்தது. நான் பகிரங்கமாக மன்னிப்புகேட்டதால், தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது. நான் இப்பதவியில் சில நாள் இருந்தாலும் மக்களுக்குநல்லதை செய்வேன் என அவர் கூறினார்.
இப்பிரச்சனை குறித்து தமிழ்நாடு டாக்டர் சங்க தலைவர் பிரகாசம் கூறியதாவது,
அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை பிரிவு டாக்டர்களை, டீன் அனுசுயா தகாத வார்ததையால் திட்டியாதுமற்றும் தாக்கியதை கண்டித்து நேற்று ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். பின் நடந்த சமாதானபேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட நிர்வாகிகள் முன்னிலையில் டீன் அனுசுயா மன்னிப்பு கேட்டதால்இப்பிரச்சனை முடிவுக்கு வந்து விட்டது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications