மூன்றில் 2 இந்தியர்கள் படித்தவர்கள்!
டெல்லி:
3 இந்தியர்களில் 2 பேர் கல்வியறிவு பெற்றவர்களாக விளங்குவதாக மத்திய மனிதவளத்துறை அமைச்சகத்தின் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
நாளை சர்வதேச கல்வியறிவு தினமாகும். இதையொட்டி மனித வளத்துறைவெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி,நாடு சுதந்திரம் பெற்றபோது இது 5 பேரில் ஒருவர்தான் கல்வியறிவு பெற்றவராகஇருந்தனர்.
கடந்த 1951ம் ஆண்டு இந்தியாவில் 18.33 சதவீதம் பேர் மட்டுமே கல்வியறிவுபெற்றிருந்தனர். 2001ம் ஆண்டு இது 64.84 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஆண்டுக்கு 2 சதவீதம் என்ற அளவில் மக்கள் தொகைஉயர்ந்துள்ளது.
இப்போது ஆண்களில் 75.26 சதவீதமும், பெண்களில் 53.67 சதவீதமும் கல்வியறிவுபெற்றவர்களாக உள்ளனர்.
மிஸோரம் மாநிலத்தில் ஆண், பெண் கல்வி அறிவு பெற்றோரிடையே உள்ளவித்தியாசம் 3.97சதவீதமாக உள்ளது. மேகலாயாவில் இது 5.82 சதவீதமாகவும்,கேரளாவில் 6.52 சதவீதமாகவும் உள்ளது.
கேரள மாநிலம் தான் கல்வி அறிவில் இந்தியாவிலேயே முதன்மையானதாகதிகழ்கிறது.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கல்வி அறிவு விகிதாச்சாரம் தற்போது 60சதவீதத்தைத் தாண்டியுள்ளது. ஆனால் விதிவிலககாக பீகார் மாநிலத்தில் மட்டும்59.68 சதவீதமாக உள்ளது.
கடந்த 1988ம் ஆண்டு தேசிய எழுத்தறிவுத் திட்டம் முழுவீச்சில் தொடங்கப்பட்டது.15 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட கல்வி அறிவு பெறாதவர்களுக்கு கற்றவர்கள்கற்றுக் கொடுப்பதுதான் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம்.
இந்தத் திட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது இந்த புள்ளி விவரம்வெளிப்படுத்துகிறது.
2007ம் ஆண்டுவாக்கில் கல்வி அறிவு விகிதத்தை 75 சதவீதமாக உயர்த்ததீர்மானிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications