வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை-இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
சென்னை:
வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் வேலையில்லாமல் இருப்போர் அரசுஉதவித் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
5 ஆண்டுகள் வேலையில்லாமல் இருந்தால் அவர்களில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூ. 150ம், பிளஸ்டூ படித்தவர்களுக்கு மாதம் ரூ. 200ம், இள நிலை, முதுகலை பட்டதாரிகளுக்கு ரூ. 300ம் வழங்கப்படும் எனதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது.இதையடுத்து ஆட்சிக்கு வந்த பின்னர், மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி முதல் இத்திட்டம் அமலுக்கு வரும் என முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
இதற்கான விண்ணப்பகள் இன்று முதல் வினியோகிக்கப்படுகின்றன. மாவட்ட கலெக்டர் அலுவலகம், தாலுகாஅலுவலகம், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இந்த விண்ணப்பங்கள் கிடைக்கும்.
பொறியியல், விவசாயம், மருத்துவம், கால்நடை போன்ற தொழிற் கல்வி பயின்றவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படாது. பிற்பட்டவர்களுக்கு 40 வயது வரையிலும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு 45வயது வரையிலும் உதவித் தொகை கிடைக்கும்.
உதவித் தொகை வேண்டுவோர் அரசு, தனியார் நிறுவனத்தில் ஊதியம் பெறும் பணியில் இருக்கக் கூடாது.முற்றிலும் வேலையற்றவராக இருக்க வேண்டும். உதவி பெறுவோரின் தந்தை, தாய், கணவர் அல்லதுமனைவியின்மாத வருமானம் ரூ. 2,000க்கு அதிகமாக இருக்கக் கூடாது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications