ஜெ. மக்களுக்கு செய்யும் நன்மை-கருணாநிதி
சென்னை:
ஜெயலலிதாவின் நாக்குதான் அவருக்கு எப்போதும் விரோதி என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
முரசொலியில் கருணாநிதி எழுதியுள்ள கேள்வி-பதில்கள்:கேள்வி: ஆண்டிப்பட்டியில் பேச்சைத் தொடங்கிய ஜெயலலிதா தன்னை யார் எதிர்த்தாலும் தன்னுடைய மக்கள்சக்திக்கு முன் தலைகுனிந்துதான் ஆக வேண்டும் என்கிறாரே?
பதில்: அவர் மதுரைக்கு புறப்பட்டுச் செல்லும் விமானம் மும்பையில் இருந்து வரவிருந்தது. அது தாமதமாகவந்ததால், தனியார் விமானத்தில் பயணம் செய்ததாகவும், வேண்டுமென்றே ரன்வே காலியாக இல்லை என்றுகூறப்பட்டதாகவும், வேண்டுமென்றே அவரை தடை செய்ததாக கற்பனை செய்து கொண்டு தன்னை யார்எதிர்ததாலும் பலிக்காது என்று அறை கூவல் விட்டிருக்கிறார்.
நல்லவேளை கருணாநிதி தான் அந்த விமானப் பயணத்தையே தடுக்க முனைந்தார் என்று குற்றச்சாட்டு கூறாமல்விட்டாரே, அதுவே ஆச்சரியம்.
கேள்வி: ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு நன்மை செய்து கொண்டே இருப்பேன் என்றுஜெயலலிதா பேசியது பற்றி?
பதில்: அவர் ஆட்சியில் இல்லாமல் இருப்பதே மக்களுக்கு செய்கின்ற நன்மை தானே. அதைத்தான் அவ்வாறுசொல்லியிருக்கிறார் போலும்.
கேள்வி: கருணாநிதியை எதிர்கின்ற ஒரே அரசியல் தலைவர் ஜெயலலிதாதான் என்றும் மற்ற எல்லோருக்கும்ஜால்ரா தட்டுவதற்கே நேரம் இல்லை என்று ஜெயலலிதா கூறி இருப்பதைப் பற்றி?
பதில்: தமிழகத்திலே முதல்வராக இருந்தவர், தற்போதும் எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் மற்றக் கட்சித்தலைவர்களிடம், எந்த அளவிற்கு மரியாதை செலுத்துகிறார். என்பதற்கு இதுவே தக்க உதாரணம். அவருடையநாக்குதான் அவருக்கு எப்போதும் விரோதி. நாகரீகம், பண்பாடு, மரியாதை இதெல்லாம் அவருக்குத் தெரியாது.கடையிலே வாங்கும் பொருள்கள் அவை என்று கருதியிருக்கிறார்.
கேள்வி: விடுதலைப் புலிகளுடன் ஜெயலலிதா ரகசியத் தொடர்பு என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கிருஷ்ணசாமி விடுத்த அறிக்கைக்கு அடிப்படை ஆதராம் இருக்கிறதா என்று ஜெயலலிதா கேட்கிறாரே?
பதில்: விடுதலைப் புலிகளைத் தடை செய்ததே நான் தான் என்று தங்கை (ஜெ) தோள் தட்டிக் கொள்கிறார். புதியஅண்ணனோ (வைகோ) விடுதலைப் புலிகளை ஆதரிக்காமல் இருக்கவே மாட்டேன் என்கிறார். இவர்கள்இருவரும் அமைத்துக் கொண்டுள்ள கூட்டணியைப் பற்றி நண்பர் கிருஷ்ணசாமி சந்தேகத்தை எழுப்புவதுஎப்படித் தவறாகும்?
கேள்வி: இலவச காஸ் அடுப்பு கொடுக்கப் போகிறீர்களே, சிலிண்டருக்கு பணம் யார் கொடுப்பது என்றும்கேட்கிறார்.
பதில்: 2001ம் ஆண்டு அதிமுக சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இலவசமாக காஸ் அடுப்புவழங்கப்படும் என்று அறிவித்த ஜெயலலிதா, தனது ஐந்தாண்டு கால ஆட்சியில் அதைப்பற்றியே நினைக்காமல்இருந்து விட்டு தற்போது சிலிண்டருக்கு பணம் யார் கொடுப்பது என்று கேட்கிறார். இதற்கு பெயர்தான் ஆடுநனைகிறதே என்று ஓநாய் அழுகின்ற கதை.
கேள்வி: திமுக தனது நிதிநிலை அறிக்கையில் தெரிவித்த இலவச திட்டங்களுக்கு நிதியை ஒதுக்கீடுசெய்யவில்லை என்று ஜெயலலிதா கூறியிருக்கிறாரே?
பதில்: ஜெயலலிதா ஆட்சியில் 11.03.2005 அன்று நடைபெற்ற நிதிநிலை அறிக்கையில் பொது விவாதத்தில்உரையாற்றிய ஸ்டாலின், காவல்துறை தலைமை அலுவலகம் பற்றி கேட்ட போது ஜெயலலிதா எழுந்து, காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டப்பணிகள் வேகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
ஒராண்டிற்குள் அந்த முழு கட்டட வளாகம் கட்டி முடிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றுபதிலளித்து, அவைக் குறிப்பிலும் இடம் பெற்றுள்ளது. அதாவது தமிழகச் சட்ட பேரவையில் முதல்வராக இருந்தஜெயலலிதா 11.03.2005 அன்று காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திற்கான கட்டடப் பணிகள்வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்று தெரிவித்தார்.
உண்மையிலே கட்டடப் பணிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருந்ததா என்றால் கிடையாது. அது முற்றிலும்தவறான செய்தியாகும். அடிக்கல் நாட்டு விழா நடைபெற்ற பிறுகு ஆரம்பப் பணிகள் கூட எதுவும்நடைபெறவில்லை. சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் அதற்கான மனைப் பிரிவு வரைபடத்திற்கு ஒப்புதல்கூட அளிக்காத நிலையில் சட்டப் பேரவையில் இத்தனை பெரிய பொய்யை முதல்வராக இருத்தவரேதெரிவித்திருக்கிறார்.
அந்த இடம் இன்னமும் காலியாக இருக்கின்ற காரணத்தால் தான். அந்த இடத்தில் இரண்டாவது டைடல் பூங்காஅமைக்கப்படும் என்று தற்போது நாம் அறிவித்திருக்கிறோம். இவ்வாறு நிதியே ஒதுக்காமல் திட்டத்தைநடைமுறைப்படுத்துவதாக பேரவையிலேயே கூறியவர்தான் நம்மைப் பார்த்து நிதி நிலை அறிக்கையிலேதெரிவித்த இலவச திட்டங்களுக்கு நிதியை ஒதுக்கீடு செய்யவில்லை என்கிறார்.
கேள்வி: தேமுதிக கட்சியை தொடங்கியுள்ள விஜய்காந்த் திராவிடர் அல்ல என்று தாங்கள் கூறியதாகவும்,அதற்கு பதில் அளிக்கும் முறையில் அவர் தங்களை ஒவ்வொரு மேடையிலும் ஆவேசமாகத் திட்டி பேசிவருகிறாரே. முன்பு எப்படியெல்லாம் உங்களோடு நட்பு கொண்டு பழகியவர்கள் இன்று நச்சு மொழிகளால்பேசுவது வேடிக்கையா? வேதனையா?
பதில்: என்ன செய்வது, நட்பாக இருந்தவர்கள் முன்பு நம்மை மதித்துப் புகழ்ந்தவர்கள், எப்படியோ ஒரு காலகட்டத்தில் நட்பு முறிந்துவிடும் போது நச்சு மொழி தூவி அர்ச்சிக்கிறார்கள். இப்போது தான் எண்ணிவேதணைப்படுகிறேன். எண்பது வயது வரையில் ஆயுள் நீண்டிருக்கக்கூடாது என்று பத்து இருபதுஆண்டுகளுக்கு முன்பே முடிந்திருந்தால், பழைய நண்பர்களின் நாராச வார்த்தைகளையும் நன்றி மறந்தசெயல்பாடுகளையும் படிக்கவோ, கேட்கவோ வாய்ப்பு இல்லாமல் போயிருக்குமல்லவா?
உண்மை என்னவென்றால் நான் எந்த ஒரு கூட்டத்திலும் நிகழ்ச்சியிலும் அல்லது கட்டுரையிலும் விஜய்காந்தைதிராவிடன் அல்ல என்ற சொன்னதே கிடையாது. ஒரு சில பத்திரிகைகள் தவறான தலைப்பிட்டு, விஜய்காந்த்திராவிடன் அல்ல என்று நான் பேசியதாக வெளியிட்டுவிட்டன. அதை தெளிவுப்படுத்திக் கொள்ளாமல் அவர்கடுமையாக கண்டனம் தெரிவித்துக் பேசி வருகிறார். உண்மை என்ன? என்பது உள்ளத்துக்கு தெரியுமாதலால்,நான் வருத்தப்படவில்லை என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications