வீட்டுச் சுவர் இடிந்து 3 சிறுவர், சிறுமியர் பலி
திருச்சி:
திருச்சியில், வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் 3 சிறுவர், சிறுமியர் பரிதாபமாகஇறந்தனர்.
திருச்சி ஜீயபுரம் அருகே உள்ள முருங்கப்பேட்டையைச் சேர்ந்தவர் மூக்கையன்.விவசாயியான இவரது மனைவி மருதம்மாள். இவர்களுக்கு அடைக்காயி, போதும்பொண்ணு, மேகம்மாள், தனலட்சுமி ஆகிய மகள்களும் பெரியண்ணன், நீலமேகம்ஆகிய மகன்களும் உள்ளனர்.அடைக்காயி 10 வது வகுப்பும், நீலமேகம் 4வது வகுப்பும், தனலட்சுமி 2வதுவகுப்பும் படித்து வந்தனர். ஓட்டு வீட்டில் வசித்து வந்தார் மூக்கையன் . சமீபத்தில்பெய்த மழையில் அவரது வீட்டு சுவரில் விரிசல் விழுந்தது. இருந்தாலும் சுவரை சரிசெய்ய காசு இல்லாததால் அதை பழுது பார்க்காமலேயே இருந்து வந்தார் மூக்கையன்.
இந்த நிலையில், நேற்று இரவு சாப்பிட்டு விட்டு அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தனர். மூக்கையன், மருதம்மாள், மேகம்மாள், போதும் பொண்ணு,பெரியண்ணன் ஆகியோர் வீட்டுக்கு வெளியே காற்றாட படுத்திருந்தனர்.
அதிகாலை 4 மணிக்கு திடீரென வீட்டுச் சுவர் உள்பக்கமாக விழுந்தது. சுவர் விழுந்தசப்தம் கேட்டு மூக்கையன் குடும்பத்தினர்அலறி அடித்து எழுந்தனர்.வீட்டுச் சுவர் உள்பக்கமாக விழுந்ததால், உள்ளே தூங்கிக் கொண்டிருந்த அடைக்காயி,தனலட்சுமி, நீலமேகம் ஆகியோர் உடல் நசுங்கினர். உடனடியாக போலீஸாருக்கும்,தீயணைப்புப் படையினருக்கும் தகவல் தரப்பட்டது.
தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து இடிபாடுகளைஅகற்றிப் பார்த்தனர்.அப்போது நீலமேகம், தனலட்சுமியும் இறந்து விட்டது தெரிய வந்தது. அடைக்காயிமட்டும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவரை திருச்சி அரசுமருத்துவனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர்பரிதாபமாக இறந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications