அமெரிக்கா-பிரபலமாகும் இன்டர்நெட் ரேடியோ
பாவ்லோ ஆல்டோ:
உலகம் முழுவதும் இன்டர்நெட் ரேடியோ பிரபலமாகி வருகிறது, குறிப்பாகஅமெரிக்காவில்.
வழக்கமான ரேடியோக்களில் இருப்பதை போல விளம்பர குறுக்கீடுகள் இதில்இல்லை என்பதால் பலரின் விருப்பத்துக்குரிய ஐட்டமாக இன்டர்நெட் ரேடியோ மாறிவருகிறது. அதிலும் அமெரிக்காவில் இதற்கு மிக அதிகமான விசிறிகள் உருவாகிவருகின்றனர்.இதைப் பார்த்த கலிபோர்னியாவின் பாவ்லோ ஆல்டோ நகரைச் சேர்ந்த பில்கோல்ட்ஸ்மித் என்பவர் தனது வீட்டின் மொட்டை மாடியை இன்டர்நெட் ரேடியோநிலையமாக மாற்றி விட்டார்.
எப்.எம்.ரேடியோ ஒன்றில் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றியவர் பில். அதிலிருந்துவிலகி இன்டர்நெட் ரேடியோவை தொடங்கினார்.
தனது ரேடியோ படு சிறப்பாக போய்க் கொண்டிருப்பதாக கூறும் பில், இந்தரேடியோவை நடத்த யாரிடமும் நன்கொடை பெறுவதில்லையாம். முற்றிலும் இலவசசேவையைக் கொடுத்து வருகிறாராம்.
தனக்குப் பிடித்த இசை நிகழ்ச்சிகள், ராக் பாடல்கள், செக்ஸ் சம்பந்தமான கேள்விபதில்களை ஒலிபரப்பி அசத்தி வருகிறார் பில்.
வழக்கமான ரேடியோக்களில் விளம்பரங்களைப் போட்டு தாக்கி விடுவார்கள்.ஆனால் இந்த இன்டர்நெட் ரோடியோவில் அந்த பஞ்சாயத்தே கிடையாது.இதனால்தான் அமெரிக்கர்கள் வழக்கமான ரேடியோவை விட்டு விட்டு இன்டர்நெட்ரேடியோ மீது நேசம் காட்ட ஆரம்பித்துள்ளனர் என்கிறார் பில்.
வழக்கமாக இதுபோன்ற இன்டர்நெட் ரேடியோவை கேட்க விரும்புபவர்கள்பிராட்பேண்ட் இணைய தள இணைப்பு வைத்திருக்க வேண்டும். அது இருந்தால்தங்களது கம்ப்யூட்டருடன் இணைத்து ரசிக்க முடியும்.
ஆனால் இந்த ரேடியோவுக்கு ஏற்பட்டுள்ள மவுசைப் பார்த்து இதை எளிதாக கேட்டுரசிக்கும் வகையில் பிரத்யேக உபகரணங்களை தயாரிக்கும் வேலையில் பிலிப்ஸ்மற்றும் ரோகு போன்ற பிரபல ரேடியோ நிறுவனங்கள் இறங்கியுள்ளன.
ரோகு நிறுவனத்தின் செளன்ட் பிரிட்ஜ் ரேடியோ உபகரணத்தில், பட்டனைத் தட்டினால்ஆட்டோமேட்டிக்காக இன்டர்நெட் ரேடியோவை ரசிக்க முடியும். உட்கார்ந்து பிரவுஸ்செய்து ரேடியோவுக்கான இணைய தளத்தை தேட வேண்டியதில்லை. அந்தவேலையை சென்ட் பிரிட்ஜ் செய்துவிடும்.
அமெரிக்காவில் தற்போது 12 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே ஐந்தில் ஒருவர்இன்டர்நெட் ரேடியோவின் நேயராக இருப்பதாக கருத்துக் கணிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
