சர்ச்சைகளை தாண்டி ஒலித்தது வந்தே மாதரம்!
டெல்லி:
இந்தியா முழுவதும் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகளில் வந்தே மாதரம் பாடல் இன்றுஇசைக்கப்பட்டது.
வங்கத்தின் புரட்சிக்கவி பக்கிம் சந்திரசாட்டர்ஜி எழுதிய வந்தே மாதரம் பாடல்இசைக்கப்பட்டு நூறு ஆண்டுகள் ஆவதையொட்டி இன்று நாடு முழுவதும் உள்ளபள்ளி, கல்லூரிகளில் வந்தே மாதரம் பாடலை பாடுமாறு மத்திய அரசு கோரிக்கைவிடுத்திருந்தது.இப்பாடலை பாடுவது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இந்தப் பாடல்துர்கா தேவியை வழிபடுவதாக உள்ளதால் இப்பாடலை கட்டாயம் பாட வேண்டும்என வற்புறுத்தக் கூடாது என முஸ்லீம்களில் ஒரு பிரிவினரும், சீக்கியர்களும் மத்தியஅரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து இதைப் பாடுவது கட்டாயமில்லை என மத்திய மனித வளத்துறைஅமைச்சர் அர்ஜூன் சிங் கூறி சர்ச்சையில் சிக்கினார்.
தமிழக அரசும் வந்தே மாதரத்தை பள்ளிகளில் இசைக்க உத்தரவிட்டதோடு, இதைப்பாட யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் உத்தரவில் கூறியது.
இதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தனது கட்சி ஆளும் மாநிலங்களில்பள்ளிகளில் கட்டாயம் இந்தப் பாடல் பாடப்பட வேண்டும் என பாஜகஉத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் ஆளுநர் மாநிலங்களிலும் கட்டாயம் பாடவேண்டியதில்லை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்தனை சர்ச்சைகளுக்கு மத்தியில், இன்று நாடு முழுவதும் பல்வேறு பள்ளி,கல்லூரிகளில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது.
டெல்லியில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிழ்ச்சியில் முன்னாள்பிரதமர்வாஜ்பாய், அத்வானி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாடினர். சென்னைபாஜக தலைமையகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து வந்தே மாதரம்இசைக்கப்பட்டது.
தமிழகத்திலும் பல்வேறு நகரங்களில் இப்பாடல் இசைக்கப்பட்டது. பல்வேறு பள்ளி,கல்லூரிகளில் மாணவ, மாணவியர் பாடல்களைப் பாடினர். பல பள்ளிகளில் பாரதமாதா வேடம் அணிந்த மாணவிகள் கொடி பிடித்தபடி நிற்க மாணவ, மாணவியர்வந்தே மாதரம் பாடலைப் பாடினர்.
திமுக மீது பாஜக தாக்கு:
சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வந்தே மாதரம் பாடப்பட்ட பின் நிருபர்களிடம் பேசிய அக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் குமாரவேலு,
இது பாஜகவின் பாடல் அல்ல. இது ஒரு குறிப்பிட்ட மதம், இனம், மொழியை பாடப்பட்டது அல்ல. இந்தியாவின் முதன் தேசிய கீதமாக வந்தேமாதரம் தான் இருந்தது. ஜன கன மண பாடப்பட்ட பிறகு இசையமைக்க எளிதாக இருந்ததால் அது தேசிய கீதமானது. வந்தே மாதரம் பாடவிரும்பாதவர்கள் தேசத்துக்கு எதிரானவர்கள்.
இந்த பாடலை பாடும் பிரச்சனையில் காலையில் ஒரு அறிவிப்பையும் மாலையில் ஒரு அறிவிப்பையும் வெளியிட்டு திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது.திமுகவுக்கு என்று எந்த கொள்கையும் கிடையாது. மத்தியில் காங்கிரஸ் சொல்வதை அப்படியே கேட்கிறார்கள் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications