ஓபி, அனிதா ராதாகிருஷ்ணன், பினாமிகள் வீடுகளில்லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை-ஜெ கண்டனம்
சென்னை:
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரது வீடுகளிலும்அவர்களது பினாமிகளின் வீடுகளிலும் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி ரெய்ட் நடத்திவருகின்றனர்.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான சென்னை, மதுரை, பெரியகுளம், தேனி ஆகிய ஊர்களில் உள்ளவீடுகளிலும், உறவினர்கள், பினாமிகளின் வீடுகளிலும் சோதனைகள் நடந்து வருகின்றன.மேலும் சென்னையில் ஓ.பன்னீர் செல்வம் தங்கும் நட்சத்திர பிரசிடென்சி ஹோட்டலின் 516வது அறையிலும்,ஆழ்வார்ப்பேட்டையிலுள்ள மகன் ரவீந்திர நாத்தின் வீட்டிலும், அவருக்குச் சொந்தமான வணிகஇடங்களிலும் சோதனை நடந்தது. எம்எல்ஏ ஹாஸ்டலில் உள்ள பன்னீரின்அறையிலும் சோதனை நடந்தது.
காலை 7 மணி முதல் இந்த வீடுகளை முற்றுகையிட்ட லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அதிரடி சோதானையை தொடங்கினர்.பெரியகுளம் வடக்கு அக்ரஹாரத்தில் உள்ள பன்னீர் செல்வத்தின் வீட்டுக்குச் சென்ற போலீஸார், வீட்டின் கதவை உட்புறமாகபூட்டிக் கொண்டு சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மூன்றாந்தல் என்ற இடத்தில் உள்ள பன்னீர் செல்வத்தின் தம்பி ராஜா வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது. பெரியகுளம்-தேனிசாலையில் உள்ள பன்னீர் செல்வத்தின் அலுலகத்திலும் சோதனை நடக்கிறது.
சென்னை கோடம்பாக்கம் சுப்பராயலு தெருவில் பன்னீரின் நண்பர் எல்ஐசி மாணிக்கம் என்பவரின் வீட்டிலும், வளசரவாக்கம்இந்திரா நகரில் உள்ள ராணி என்பவரின் வீட்டிலும் சோதனை நடக்கிறது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த சோதனைகள்நடந்து வருகின்றன.
அதே போல திருவல்லிக்கேணி சாமிப்பிள்ளை தெருவில் ஒரு வீடு, நந்தனம் டவப் பிளாக், வேளச்சேரியில் உள்ள வீடுகளிலும்சோதனை நடக்கிறது.
அமைச்சராகும் முன் பன்னீர்செல்வம் டீக் கடை வைத்திருந்த ஒரு சாதாரணர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான சென்னை, தூத்துக்குடி, திருச்செந்தூர், மதுரை வீடுகளிலும்அவரது பினாமிகள், உறவினர்களின் வீடுகளிலும் ரெய்ட் நடந்து வருகிறது. சென்னை எம்.ஆர்.சி நகநல் உள்ளஅனிதா ராதாகிருஷ்ணன் வீடு, திருச்செந்தூர் அருகே தண்டுபத்து கிராமத்தில் உள்ள அனிதாவின் பூர்வீக வீடுஆகியவற்றிலும் ரெய்ட் நடக்கிறது. இங்குள்ள அனிதாவின் நண்பர் சித்தரை நாதன் என்பரின் வீட்டிலும் ரெய்ட்நடந்தது.
மேலும் மதுரை தபால் தந்தி நகரில் உள்ள அவரது வீடு, எல்லீஸ் நகர், அண்ணா நகரில் உள்ள தம்பி சண்முகத்தின் வீடுகள்,மதுரையில் கீழவாசலில் அனிதாவுக்கு சொந்தமான 7 நிறுவனங்கள் ஆகியவற்றில் அதிரடி சோதனை நடந்து வருகிறது. அவரதுஅலுவலகங்களிலும் சோதனை நடக்கிறது. அதே போல அனிதாவுக்கு சொந்தமான தூத்துக்குடியில் உள்ள கடைகளிலும்சோதனை நடந்தது.
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது தம்பி வீட்டிலும் ரெய்ட் நடக்கிறது.
இந்த சோதனையில் கணக்கில் வராத சொத்துக்கள், பணம் தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளதாகத்தெரிகிறது.
அனிதா ராதாகிருஷ்ணன் அமைச்சராகும் முன் ஈயம், பித்தளை, சில்வர் பாத்திரங்கள் விற்கும் கடை வைத்திருந்தார். அந்தக்கடையின் பெயர் அனிதா ஸ்டோர்ஸ். அதுவே ராதாகிருஷ்ணன் என்ற பெயருடன் ஒட்டி இவர் அனிதா ராதாகிருஷ்ணன்ஆகிவிட்டார்.
கடந்த அதிமுக ஆட்சியில் அதிக செல்வாக்குடன் வலம் வந்த அமைச்சர்களில் இந்த இருவரும் அடங்குவர்.இவர்கள் வருமானத்தை மீறி சொத்து சேர்த்துள்ளது உறுதியாகியுள்ளதால் இந்த சோதனைகள் நடப்பதாககாவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பன்னீர்செல்வம் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். அனிதா ராதாகிருஷ்ணன் வீட்டு வசதி மற்றும்நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக அமைச்சரைவயில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந் நத்தம் விஸ்வநாதனின் வீடு, அலுவலகங்களில் கடந்தமாதம் அதிரடி சோதனை நடந்தது நினைவிருக்கலாம்.
ஜெ. கண்டனம்:
இந் நிலையில் பன்னீர், அனிதா ஆகியோரது வீடுகளில் நடந்துள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சென்னையில் மக்கள் குரல் பத்திரிக்கை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை குறித்து செய்தியாளர்கள்கேட்டபோது,
சட்டசபை தேர்தல் முடிந்ததுமே இது மாதிரியான சோதனைகளை நாங்கள் எதிர்பார்த்தோம். இப்போது நடத்துகிறார்கள்.
திமுக அரசு பதவிக்கு வந்தது முதல் அதிமுகவினர் மீது பழிவாங்கும் வகையில் நடந்து வருகிறது. முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடந்துள்ள ரெய்ட்அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைதான். அவர்கள் எத்தனை முறை ரெய்ட் செய்தாலும் எதுவும் கிடைக்காது. எங்களை முடக்கவும் முடியாது. சட்டப்படிஅனைத்தையும் எதிர்கொள்வோம் என்றார் ஜெயலலிதா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications