விளம்பரப் பலகைகளுக்கு கரண்ட் கட்!
சென்னை:
சென்னை கிண்டி கத்திப்பாரா சந்திப்பிலிருந்து பல்லாவரம் வரையில் உள்ளசாலையோர விளம்பரப் பலகைகளுக்கு வழங்கப்பட்டுள்ள மின் இணைப்பைதுண்டிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை விமான நிலைய இயககுநர் சிகாமணி இதுதொடர்பாக சென்னைஉயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், சென்னை விமான நிலையத்தின்கிழக்கில் பரங்கிமலையும், தெற்கில் திரிசூலம் மலையும் உள்ளன. நீண்ட ஓடுபாதைவிமான நிலையத்தில் உள்ளது.இந்த ஓடு பாதைக்கு இணையாக கிண்டி கத்திப்பாரா சந்திப்பிலிருந்து பல்லவாரம்வரை தேசிய நெடுஞ்சாலையும் செல்கிறது. ஓடுதளத்திலிருந்து 500 மீட்டர்தொலைவில் தேசிய நெடுஞ்சாலை இருக்க வேண்டும். ஆனால் இந்த தேசியநெடுஞ்சாலை விமான ஓடுபாதைக்கு மிக அருகிலேயே உள்ளது.
விமான நிலையத்தைச் சுற்றிலும் பெரிய கட்டடங்கள், உயரமான தடுப்புகள்இருக்கக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்து. ஆனால் அந்த உத்தரவை மீறிகத்திப்பாரா சந்திப்பிலிருந்து பல்லாவரம் வரை ஏராளமான பெரிய பெரிய விளம்பரப்பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
அந்த விளம்பரப் பலகைகளில் பிரகாசமான விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இரவுநேரங்களில் இந்த விளக்குகள் எரிவதால், விமானத்தை இறக்கும் போதுஓடுபாதையை கண்டறிவதில் விமானிகளுக்கு குழப்பம் ஏற்படுகிறது. இதனால்விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளன.
எனவே இந்த விளம்பரப் பலகைகளுக்கு தடை விதிக்க வேண்டும். மிகவும்உயரமான, அகலமான விளம்பர பலைகைளை அகற்ற உத்தரவிடவேண்டும் என்றுகோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா,நீதிபதி சந்துரு ஆகியோர்அடங்கிய பெஞ்ச், கிண்டி கத்திப் பாராசந்திப்பிலிருந்து பல்லவாரம் வரையில் உள்ளவிளம்பரப் பலகைளுக்கு வழங்கப்பட்டுள்ள மின் இணைப்பை தமிழக மின் வாரியம்உடனடிாயக துண்டிக்க வேண்டும். ஜெனரேட்டல் மூலமும் கூட இந்த பலகைகளுக்குமின்சாரம் வழங்கக்கூடாது.
இந்த உத்தவுரவு பின்பற்றப்பட்டதா என்பது குறித்து சென்னை மாநகர காவல்துறைஆணையரும், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை 14ம் தேதிக்குஒத்திவைத்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications