செப்-11: அல்-கொய்தாவின் பயிற்சி வீடியோ!
துபாய்:
2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி விமானங்களைக் கொண்டு நியூயார்க் இரட்டை கோபுரத்தைத் தாக்கியதீவிரவாதிகளுடன் பின்-லேடன் கலந்துரையாடும் காட்சிகள் அடங்கிய புதிய வீடியோவை அல்-கொய்தாஇப்போது வெளியிட்டுள்ளது. இதனை அல்-ஜசீரா தொலைக்காட்சி ஒளிபரப்பியது.90 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் செப்டம்பர் 11 தாக்குதல் குறித்து பின் லேடன் அல்கொய்தாஅமைப்பினருடன் ஆலோசனை நடத்தும் காட்சிகளும், தாக்குதலுக்கு தயாராகும் காட்சிகளும், அதற்காகஅல்-கொய்தாவினர் எடுக்கும் பயிற்சிகளும் காட்டப்படுகின்றன.
இதில் 3 நிமிட வீடியோவை மட்டுமே அல்-ஜசீரா ஒளிபரப்பியது. இந்த வீடியோ எப்படி தங்களிடம் வந்ததுஎன்பதை அந்த சேனல் தெரிவிக்கவில்லை.
![]() |
| அல்-ஜசீராவில் ஓடும் வீடியோ |
வீடியோவின் துவக்கத்தில் ஆப்கானிஸ்தானில் மலைப் பகுதிகளில் லேடனும் செப்டம்பர் 11 தாக்குதலுக்குமூளையாக செயல்பட்ட ராம்சி பின் ஷிபாவும், அல் கொய்தாவின் ராணுவ பிரிவு தலைவனான அப் ஹப்ஸ் அல்மஸ்ரியும் லேடனுடன் அமெரிக்க தாக்குதல் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர்.
இதையடுத்து இதற்கான பயிற்சிகள் நடக்கும் காட்சிகள் காட்டப்படுகின்றன. அபு அல் துராப் என்றதீவிரவாதியின் தலைமையில் இந்த பயிற்சி நடக்கிறது. இந்தப் பயிற்சியில் ஒருவரை எப்படி வெறும்கையாலேயே தாக்கி நிலை குலையச் செய்வது, தங்களை பின்னால் இருந்து தாக்க முயல்வோரை எப்படிசமாளிப்பது, எப்படி போலி ஆவணங்கள் தயாரிப்பது,
![]() |
| செப்.11 தாக்குதல் குறித்து திட்டமிடும் பின் லேடன் |
கத்தியை எப்படி மறைத்து வைப்பது, அதை வைத்து எப்படி தாக்குவது ஆகிய பயிற்சிகள் அடக்கம்.
செப்டம்பர் 11 தற்கொலை தாக்குதலில் நேரடியாக ஈடுபட்டு விமானங்களை இரட்டை கோபுரத்தில் மோதிய 19பேரில் ஹமாஸ் அல் ரமாதி, வேய்ல் அல்- ஷெமீரி ஆகிய இருவரும் இந்தப் பயிற்சியை மேற்கொள்கின்றனர்.
இதையடுத்து வரும் காட்சிகளில் கருப்பு உடையில் பின் லேடன் ஆப்கானிஸ்தானின் மலைப் பகுதியில் உள்ளதீவிரவாத முகாம்களை பார்வையிட்டு தீவிரவாதிகளை வாழ்த்தும் காட்சியும் இடம் பெற்றுள்ளது.
பின் லேடனை நோக்கி புரட்சி கோஷம் எழுப்பும் தீவிரவாதிகளின் பயிற்சியை லேடன் பார்வையிடுகிறார். அந்ததீவிரவாதிகளில் செப்டம்பர் 11 தாக்குதலில் நேரடியாக பங்கேற்று உயிர் நீத்த தீவிரவாதிகளும் அடக்கம் எனஅல்-ஜசீரா கூறியுள்ளது.
இதையடுத்து வீடியோவில் பேசும் லேடன், இவர்களது திட்டம் (விமான தாக்குதல்) வெற்றி பெற நாம்அனைவரும் கடவுளை வேண்டுவோம். அவர்களது இதயமும் உடலும் பலம் பெற்று இயங்கட்டும் என்கிறார்.
செப்டம்பர் 11ம் தேதி நெருங்கும் நிலையில் இந்த நேரத்தில் இந்த வீடியோவை ஏன் அல்-கொய்தா ரிலீஸ்செய்தது என்று தெரியவில்லை. ஏற்கனவே பதற்றத்தில் இருக்கும் அமெரிக்காவை மேலும் அச்சுறுத்தவே இந்தவீடியோ வெளியிடப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?














Click it and Unblock the Notifications