7 இடங்களில் குண்டு: 17 பேருக்கு கடுங்காவல் தண்டனை!
சென்னை:
தமிழகத்தின் 6 இடங்களிலும், கேரளாவிலும் வெடிகுண்டுகள் வைத்த வழக்கில் அல் உம்மா அமைப்பைச் சேர்ந்த17 பேருக்கு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1998ம் ஆண்டு கோவை மற்றும் சென்னையில் குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள்சிறையில் கொடுமைப்படுத்தப்பட்டதாக கூறி அல் உம்மா குற்றம் சாட்டியது. மேலும், இந்த சித்திரவதைக்குப்பதிலடிதர குண்டு வெடிப்புகளை நிகழ்த்த திட்டமிட்டனர்.1999ம் ஆண்டுமே மாதம் 30ம் தேதி சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம், அண்ணா நகர்விருந்தினர் இல்லம், சேப்பாக்கம் விருந்தினர் இல்லம், விக்டோரியா விடுதி, திருச்சி கண்டோன்மென்ட், கோவைபோலீஸ் குடியிருப்பு மற்றும் கேரளா செல்லும் திருச்சூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவற்றில் குண்டுகள்வைக்கப்பட்ன.
விக்டோரியா விருந்தினர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு மட்டுமே வெடித்தது. மற்ற குண்டுகள்வெடிப்பதற்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டு விட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக அல் உம்மா அமைப்பைச் சேர்ந்த 19 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில்17 பேர் பிடிபட்டனர். 2 பேர் சிக்கவில்லை. 17பேர் மீதும் பூந்தமல்லி வெடிகுண்டு வழக்குகளுக்கானநீதிமன்றத்தில் விசாரனை நடந்து வந்தது. நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
தடா மூசா, சுல்தான் என்ற சித்திக் அலி, ஜாகிர்உசேன் ஆகிய 3பேருக்கும் தலா 8 ஆண்டு கடுங்காவல் தண்டனைஅளிகக்ப்பட்டது.
பாவாடடை ஹக்கீம், பர்க்கத்துல்லா, ஷேக் மொய்தீன், தர்மீஸ் மொய்தீன், கலீல் ரஹ்மான், ஜலீல், அப்துல் நசீர்,ஜாகிர் உசேன், முகம்மது ஹமீது, உமர் பாருக், ரஹமதுல்லா கான், ஹமானி, ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகடுங்காவல் தண்டனையும், வெடிகுண்டுகளை விநியோகித்த அருணகிரி, ராஜாமணி ஆகியோருக்கு தலா 4ஆண்டு தண்டனையும் விதிக்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications