இந்திய தூதர் மீது சந்திரிகா தம்பி திடீர் பாய்ச்சல்
கொழும்பு/டெல்லி:
இலங்கை விவகாரத்தில் இந்திய தூதர் நிரூபமா ராவ் தேவையில்லாமல்தலையிடுவதாக இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சரும், முன்னாள் அதிபர்சந்திரிகாவின் தம்பியுமான அனுரா பண்டாரநாயகே குற்றம் சாட்டியுள்ளார். அவரதுகுற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் அனுரா பண்டாரநாயகே பேசுகையில்,இலங்கையின் உள் விவகாரங்களில் இந்திய தூதர் நிரூபமா ராவ், தேவையில்லாமல்தலையிடுகிறார். நாங்கள் எங்களது வேலையை ஒழுங்காக பார்க்கிறோம், அதேபோலநிரூபமா ராவ் தனது வேலையை மட்டும் பார்த்தால் போதும்.
எனது பெற்றோர்கள் (பண்டாரநாயகே, ஸ்ரீமாவோ பண்டாரநாயகே) மற்றும் சகோதரி(சந்திரிகா) ஆகியோர் இந்த நாட்டின் பிரதமர்களாக இருந்தவர்கள். சந்திரிகாஅதிபராகவும் இருந்தவர். அனைவரும் இந்தியாவுடன் நல்லுறவு கொண்டிருந்தனர்.எனவே இலங்கையின உள் விவகாரங்களில் தலையிட்டு இதை கெடுத்துக் கொள்ளவேண்டாம் என்று கோபமாக பேசினார் அனுரா.
அனுராவின் இந்த பேச்சு இலங்கை பத்திரிக்கைகளில் பெரும் செய்தியாகவெளியிடப்பட்டுள்ளது. அந்த செய்தியுடன், அனுரா, நிரூபமா ராவ் ஆகியோர் தவிர,பாகிஸ்தான் நாட்டுத் தூதர் பஷீர் வாலி முகம்மதுவின் படமும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசு ராணுவத்துக்குத் தேவைப்படும் ஆயுதங்களை பாகிஸ்தானிலிருந்துவாங்குவதாக சமீபத்தில் இலங்கை பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகியிருந்தன.இதுகுறித்து இந்தியா தனது அதிருப்தியை இலங்கை அரசிடம் நிரூபமா ராவ் மூலம்தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
இது குறித்துத் தான் அனுரா தனது கோபத்தை நிரூபமா ராவ் மீது காட்டியிருப்பதாகஇலங்கை அரசியல வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்தியா, பாகிஸதானின்விளையாட்டு மைதானமல்ல இலங்கை என்றும் அனுரா தனது பேச்சின் போதுகடுமையாக கூறியுள்ளார்.
அனுராவின் பேச்சு இலங்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இலங்கை அரசு அதிகாரி ஒருவர் கருத்துதெரிவிக்கையில், அனுராவின் கருத்து தேவையற்றது. எதற்காக அவர் இப்படிப்பேசினார் என்பது தெரியவில்லை.
அனுரா பேசியது அவரது சொந்தக் கருத்து. அதற்கும், இலங்கை அரசுக்கும் எந்தத்தொடர்பும் இல்லை என்றார்.
இந்தியா மறுப்பு:
இதற்கிடையே, அனுராவின் புகாருக்கு இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர்நவ்தேஜ் சர்னா மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சர்னா கூறுகையில், பிறநாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவது,இந்திய அரசு மற்றும் வெளிநாடுகளில் உள்ள அதன் பிரதிநிதிகளின் கொள்கை அல்ல.
இலங்கைக்கான இந்தியத் தூதர் நிரூபமா ராவ் மூத்த தூதரக அதிகாரி. தொழில்முறையில் உயர்ந்த தரத்தைக் கடைப்பிடித்து வருபவர். இந்தியா, இலஙகைஇடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த ராவ் ஆற்றிய பங்களிப்பைஇலங்கை அரசே பாராட்டியுள்ளது.
அப்படிப்பட்டவர் மீதான புகார் ஆச்சரியம் அளிக்கிறது. இலங்கை அமைச்சரின்குற்றசட்டு தேவையற்றதும், பொருத்தமற்றதாகும் என்று கூறியுள்ளார் சர்னா.
மீண்டும் ஊர் திரும்பும் தமிழர்கள்:
இதற்கிடையே, கடந்த சில வாரங்களாக நடந்து வந்த கடும் சண்டையால்திரிகோணமலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தப்பி முகாம்களில் தஞ்சம் புகுந்திருந்தமிழர்களை மீண்டும் சொந்த ஊருக்கு அனுப்ப இலங்கை அரசு நடவடிக்கைஎடுத்துள்ளது.
ரத்தக் களறியான மூதூரிலிருந்து 30,000 தமிழர்கள் இடம் பெயர்ந்தனர். இவர்களில்12,000 பேர் கண்டாலே என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும்தற்போது சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். 150 பேருந்துகளில்இவர்கள் கண்டாலேவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
மூதூரை சுற்றிலும் சண்டை ஓய்ந்துள்ளதால் மீதம் உள்ளவர்களும் அப்பகுதிக்குதிருப்பி அனுப்பப்படுவர் என ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மூதூர்பகுதியில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் சீரடைந்துள்ளதாகவும்அவர் தெரிவித்தார். அப்பகுதியில் உள்ள சாலைகள் பழுது பார்க்கப்பட்டு விட்டன.
இருப்பினும் ஆங்காங்கே தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும்இடையே மோதல் நீடித்து வருவதால், முழுமையான பாதுகாப்பு திரும்பி விட்டதாககூற முடியாது என ராணுவம் தெரிவித்துள்ளது.கடந்த மாதம் நடந்த கடும் சண்டையின் போது 40,000 பேர் மூதூரிலிருந்து இடம்பெயர்ந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லீம்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications