சசிகலாவுக்கு சம்மன்: ஜெ. வீட்டில் ஒட்டப்பட்டது!
சென்னை:
சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்தநோட்டீஸ் சசிகலா வசிக்கும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வீட்டுவாசலில் ஒட்டப்பட்டது.
ஜெயலலிதா, சசிகலா, தினகரன் உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்குபெங்களூர் தனி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த விசாரணைதொடர்பாக பெங்களூர் நீதிமன்றம் பிறப்பித்த சம்மனை சசிகலாவைத் தவிரமற்றஅனைவரும் பெற்றுக் கொண்டுவிட்டனர். சசிகலா மட்டும் பெறாமல் இருந்து வந்தார்.இதையடுத்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உச்சநீதிமன்றத்தை அணுகினார்.சசிகலா சம்மனைப் பெறமறுப்பதால் அதை விளம்பரமாக நாளிதழ்களில் வெளியிடவேண்டும், சம்மனை சசிகலா குடியிருக்கும் வீட்டு வாசலில் ஒட்ட வேண்டும் என்றுஅவர் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், 2 முன்னணி நாளிதழ்களில் சம்மனைவிளம்பரமாக வெளியிட வேண்டும். மேலும் சம்மனை சசிகலா குடியிருக்கும் வீட்டுவாசலில் ஒட்ட வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதையடுத்து சம்மன் உத்தரவை, உதவி ஆணையர் கண்ணபிரான் தலைமையிலானபோலீஸார் சசிகலா குடியிருக்கும் ஜெயலலிதாவின் வீட்டுக்கு எடுத்து வந்தனர்.அங்கு வாசலில் உள்ள சுவரில் சம்மனை பசை போட்டு ஒட்டினர்.
இதைப் பார்த்த ஜெயலலிதா வீட்டு வேலைக்காரர் தயா வெளியே வந்துஎன்னவென்று பார்த்தார். அப்போது அவரிடம் சம்மனின் நகல் ஒன்றை கையில்கொடுத்தனர். இவை அனைத்தையும் வீடியோவிலும் பதிவு செய்து கொண்டனர்.
சம்மன் ஒட்டப்பட்டதற்கு சாட்சிகளாக மாநகராட்சி வருவாய் அதிகாரி இளவரசன்மற்றும் தேனாம்பேட்டையைச் சேர்ந்த முத்து, கபாலி ஆகியோரும் போலீஸாரால்அழைத்து வரப்பட்டிருந்தனர்.
போலீஸார் சம்மனை ஒட்டி விட்டுச் சென்ற சிறிது நேரத்திலேயே ஜெயலலிதா வீட்டில்வேலை செய்பவர்கள் வெளியே வந்து அவற்றை கிழித்துப் போட்டு விட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications