இனி மக்களுக்கு வேறு வழியே இல்லை: ஜெ.
சென்னை:
எனது ஆட்சிக் காலத்தில் கோப்புகள் தேங்கியதாக கூறும் முதல்வர் கருணாநிதி,எந்தெந்த கோப்புகள் தேஙகின என்பதை பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில்ஆதாரத்துடன் நிரூபிக்கத் தயாரா என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாசவால் விட்டுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், சட்டமன்றக் கூட்டத் தொடர் முடிந்த பிறகும் தொடர்ந்து பொய்புராணத்தை பாடி வருகிறார் கருணாநிதி. நான் கோப்புகளை தேங்க வைத்தேன் என்கிறார்.பல காரண காரியங்களையும், ரகசிய செளகரியங்களையும் முன்னிட்டு ஓயவு பெற்றஅதிகாரிகளை முதல்வர் கருணாநிதி நியமித்தது போல நான் நியமிக்கவில்லை.தனக்கு வேண்டிய சில உள் காரியங்களை ஓய்வு பெற்ற அதிகாரிகள் செய்துதருவார்கள் என்று அவர்களை கருணாநிதி நியமித்துக் கொண்டுள்ளார்.அம்மாதிரியான தேவை எனக்கு ஏற்படவில்லை.
எனது ஆட்சி காலத்தில் கோப்புகள் தேங்கியதாகவோ, நடவடிக்கைஎடுக்கப்படவில்லை என்ற பேச்சோ எழவில்லை. எனது ஆட்சி காலத்தில்சம்பந்தப்பட்ட துறை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே தங்கள் துறை சம்பந்தப்பட்டகோப்புகளை என்னிடம் அனுப்பி, அவசர, அவசியம் கருதி நேரடியாக எனதுகவனத்திற்குக் கொண்டு வந்து அவ்வப்போது உத்தரவு பெற்றுள்ளனர்.
கருணாநிதி சொல்வது போல கோப்புகள் தேங்க வண்டியஅவசியம் எனதுநிர்வாகத்தில் ஏற்பட்டதில்லை. அது கருணாநிதியின் வழக்கம்.
1991ம் ஆண்டிலும் பின்னர் 2001ம் ஆண்டிலும் அதிமுக ஆட்சிப் பொறுப்பைஏற்றபோது, கருணாநிதி முதல்வராக பணியாற்றிய லட்சணத்தை புரிந்து கொண்டேன்.இதை நான் வெளியில் சொல்லாமல் இருந்ததற்குக் காரணம் அரசுக் கோப்புகளை,விஷயஙகளை வெளியில் சொல்லக் கூடாது என்பதற்காகத்தான்.
ஆனால் இதைப் பற்றியெல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படாத மனிதர்தான்கருணாநிதி.
கோப்புகள் தேங்கியதாக கூறும் கருணாநிதி, பத்திரிக்கையாளர்கள் முன் எந்தக்கோப்பு தேங்கியது, என்ன காரணம், எப்படி அது பைசல் செய்யப்பட்டது என்பதைவெளியிடத் தயாரா? கோப்புகள் தேங்கவில்லை என்பதை என்னால்ஆதாரப்பூரவமாக தெளிவாக விளக்க முடியும்.
அதை விடுத்து விட்டு அவதூறாக பேசுவதால் அது உண்மையாகி விடாது. எதைவேண்டுமானாலும் சொல்வேன், எப்படி வேண்டுமானாலும் பேசுவேன் என்பதுகருணாநிதியின் அகராது. கடந்த 100 நாட்களாக அதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர்.
எனது ஆட்சி காலத்தில் டிஜிபி ரவீந்திரநாத் , உள்துறை செயலாளர் சையத் முனீர்ஹோடா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறி வருகிறார் கருணாநிதி. அவர்கள்ஏன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள் என்பது நிர்வாகத்தில் உள்ளவர்களுக்குதெரியும்.
தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக உயர் பெண் அதிகாரி ஒருவர் ரவீந்திரநாத் மீதுஎழுத்துப் பூர்வமாக புகார் கொடுத்தார். அந்தப் புகாரை விசாரித்து அதில் உண்மைஉள்ளது என்று தெரிய வந்ததால்தான் அவர் சஸ்பெண்ட்செய்யப்பட்டார்.
பெண்ணிடம் தவறாக நடந்தார் என்பது தெரிய வந்த பிறகும் கூட அவர் மீதுநடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியுமா என்பதை கருணாநிதிதான் விளக்கவேண்டும்.
பெண்ணை கொச்சைப்படுத்துவது, இழிவுபடுத்துவது, தவறாக நடந்து கொள்வதுகருணாநிதிக்கு சாதாரண விஷயமாக இருக்கலாம்.
முனீர் ஹோடா விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை சம்பந்தப்பட்ட கோப்புகளேசொல்லும்.
மிகப் பெரிய தீவிரவாதி மதானி. அவர் சம்பந்தப்பட்ட வழக்குகளிலிருந்து தப்பி விடவழி செயயும் வகையில் முதல்வருக்கும், தலைமைச் செயலாளருக்கும் கூடதெரியாமல், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக நடந்து கொண்டு 2 அரசாணைகளைபிறப்பித்தவரை பணியிலிருந்து நீக்காமல், பத்மஸ்ரீ விருதுக்காக பரிந்துரைக்கமுடியும்?
முனீர் ஹோடாவை பணி நீக்கம் செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரைத்து தமிழக அரசுகடிதம் எழுதியது. ஆனால் கருணாநிதி தலையீட்டால் அது நிறுத்தி வைக்கப்பட்டது.இப்போது ஆட்சிக்கு வந்தவுடன் ஹோடாவை மிகப் பெரிய பதவியில்அமர்த்தியுள்ளார் கருணாநிதி.
இதன் மூலம், தீவிரவாதம் மீது கருணாநிதிக்கு எந்த அளவுக்கு பாசம், பரிவு, அக்கறைஉள்ளது என்பது தெரிய வரும். முனீர் ஹோடா சம்பந்தப்பட்ட கோப்புகளைமுழுமையாக, பகிரங்கமாக வெளியிட கருணாநிதி தயாரா என்பதை அறியவிரும்புகிறேன்.
இப்போது கருணாநிதி செய்து கொண்டிருப்பதெல்லாம் விழாக்களில் கலந்துகொள்வது, பாராட்டுகளை வாங்கிக் கொள்வது, விலை உயர்ந்த பரிசுகளை பெற்றுக்கொள்வது, தன்னை புகழும் கூட்டத்தில் சதா உலா வருவது, பெங்களூரில் உள்ளமகளின் வீட்டில் சென்று ஓய்வெடுப்பது, இலக்கிய விழா, புத்தக வெளியீட்டு விழா,நடனம், கேளிக்கை, 5 நட்சத்திர ஹோட்டல் விருந்துகளில் கலந்து கொள்வது,எல்லாவற்றும் மேலாக முடி திருத்தும் கடையை திறந்து வைப்பது என முக்கியநாட்டுப் பணிகளை செய்து வருகிறார்.
கருணாநிதி முதல்வரான பின் 2 முறை முதல்வர்கள் மாநாட்டை மத்திய அரசுநடத்தியுள்ளது. அதில் கருணாநிதி கலந்து கொள்ளவே இல்லை. திருவனந்தபுரத்தில்நடந்த மாநாட்டுக்கு தனது சொந்தக்காரர் நாகநாதனை (தமிழக திட்டக்குழு துணைத்தலைவர்) அனுப்பி வைத்தார். அவருக்கு உதவியாக தமிழக அதிகாரிகள் பட்டாளமும்சென்றது. இதை நானும் மக்களும் கண்டித்தோம்.
அடுத்து டெல்லியில் நடந்த மாநாட்டிலும் கருணாநிதி பங்கேற்றவில்லை. ஒருஅதிகாரி, அதாவது தலைமைச் செயலாளர் மட்டுமே கலந்து கொண்டார்.இப்படிப்பட்ட ஒரு முதல் மந்திரி தமிழ்நாட்டுக்கு தேவையா என மக்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
நான் முதல்வராக இருந்தபோது இது போன்ற மாநாடுகளை புறக்கணித்ததில்லை.ஆனால், தனக்கு சம்பந்தமில்லாத வேலைகளில் தான் கருணாநிதி பிஸியாகஇருக்கிறார்.
இந்த 100 நாட்களில் தமிழ்நாட்டில் பயங்கரவாதம் வலுவாக கால் பதித்துவிட்டது.இனி மக்கள் தங்களை தாங்களே தற்காத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியேஇல்லை.
இவ்வாறு கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications