பெண்களும் அர்ச்சகர் ஆக வேண்டும்: கனிமொழி
மதுரை:
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதைப் போல பெண்களும் அர்ச்சகர்கள் ஆக நியமிக்கப்படவேண்டும் என்று கவிஞர் கனிமொழி கூறியுள்ளார்.
மதுரை மன்னர் திருமலைநாயக்கர் கல்லூரியில் நடந்த சிறப்புக் கூட்டத்தில் கனிமொழி பேசினார். அவர்பேசுகையில், பெண் சுதந்திரம் பேச்சளவில் மட்டுமே உள்ளது. அது தவறு. சமூக மாற்றத்தால் தான் பெண்சுதந்திரம் சாத்தியமாகும். அதே நேரத்தில் ஆண்களும், பெண்களின் சுதந்திரம், உரிமை முதலானவற்றை புரிந்துகொள்ள வேண்டும்.கோவில்களில் பெண்களை அனுமதிப்பது குறித்த சர்ச்சயை நீண்ட காலமாகவே இருந்து வந்துள்ளது. தற்போதுஎல்லா சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என கூறப்பட்டுள்ளது. அதே போல பெண்களையும் அர்ச்சகர்கள்ஆக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என்பது எனது கருத்து.
தமிழ் சமுதாயத்தில் வரதட்சணை, ஜாதி ஆகிய பிரச்சினைகள் பெரிதாக உள்ளன. இவற்றை நாம் களையவேண்டும். இதற்காக நாம் வெட்கப்பட வேண்டும். தமிழர்கள் மொழி குறித்து பேசினால் உடனே அதை வெறிஎன்று கூறி விடுகிறார்கள். ஆனால் தமிழை நாம் மறந்தால் நமக்கு அடையாளம் இல்லாமல் போய் விடும்.
எந்த மொழியையும் கற்கலாம், தவறில்லை. ஆனால் குறிப்பிட்ட மொழி தெரிந்தால் தான் வாழ முடியும் என்றகட்டாயம் இல்லை. தமிழகத்தைச் சேர்ந்த பல மத்திய அமைச்சர்களுக்க்கு இந்தி தெரியாது. அவர்கள் சிறப்பாகசெயல்படவில்லையா?
பெண் விடுதலை, பெண் உரிமைக்காகபாடுபட்டவர் பெரியார். ஆண், பெண் சம உரிமை வேண்டும் எனமுழங்கியவர் பெரியார். ஆண்களுக்குப் போராடும் குணம் இருப்பது போல பெண்களுக்கு இருப்பதில்லை.அத்தனை கட்சிகளும் 33 சதவீத இட ஒதுக்கீட்டை ஆதரித்தாலும் சட்டம் இன்னும் வந்தபாடில்லை.
தேர்தல் நேரத்தில் இட ஒதுக்கீடு அடிப்படையில் அனைத்துக் கட்சிகளும் பெண்களுக்கு சீட் வழங்க வேண்டும்.இல்லாவிட்டால் பேசாமல் பெண்கள் தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டியது தான் என்றார் கனிமொழி.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications