என்னை ஊனப்படுத்தி விடாதீர்கள்-காங் தலைவர்கிருஷ்ணசாமிக்கு பாரதிராஜா கடும் கண்டனம்
சென்னை:
என்னை வைத்து அரசியல் நடத்த முயற்சிக்க வேண்டாம் என தமிழக காங்கிரஸ்தலைவர் கிருஷ்ணசாமிக்கு இயக்குனர் இமயம் பாரதிராஜா கடும் கண்டனம்தெரிவித்துள்ளார்.
இயக்குனர் பாரதிராஜா சமீபத்தில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டார். அப்போதுவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்துப் பேசினார்.இந்த சந்திப்பு குறித்து உருக்கமான பேட்டியையும் பாரதிராஜாஅளித்துள்ளார்.
பாரதிராஜாவின் இலங்கை பயணம் குறித்தும் பிரபாகரனை சந்தித்தது குறித்தும்காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கடுமையாக விமர்சித்திருந்தார். ஜெயலலிதாவுக்குநெருக்கமான பாரதிராஜா பிரபாகரனை சந்தித்ததன் பின்னணி என்ன, வைகோமூலமாக ஜெயலலிதாவுக்கு புலிகளுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது என்றெல்லாம்புகார் கூறினார் கிருஷ்ணசாமி.
இதற்கு பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக காங்கிரஸைச் சேர்ந்த பெரியவர்கிருஷ்ணசாமி கடந்த 2, 3 நாட்களாகதேவையில்லாமல் என்னைப் பற்றிய விமர்சனங்களைபத்திரிகைகள் வாயிலாக தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.
அறிக்கைகளுக்கு அறிக்கை மூலம் பதில் சொல்வது என்பது அரசியல் நடத்துவதற்குச்சரியாக இருக்கலாம்.
உணர்வுப்பூர்வமான ஒரு பிரச்சினைக்கு பதில் அறிக்கை விட்டு அறிக்கைப் போர்நடத்துவது அநாகரீகமானது எனறுதான்நான் ஒதுங்கியே இருந்தேன்.
ஆனால் ஏதோ காரணத்தை மனதில் வைத்துக் கொண்டு தினமும் ஒரே தவறானசெய்தியை திரும்பத் திரும்ப சொல்லி என்னை இப்படி ஒரு அறிக்கை விட வைத்துவிட்டார்.
நெய்வேலி போராட்டம் ஒருவரலாற்றுப் பதிவு. காவிரி தண்ணீருக்காக தஞ்சைவிவசாயிகளுக்கு அவர்களின் துயர் துடைப்பதற்கு அரசியல் சூழல்காரணமாக நீங்கள்யாருமே குரல் கொடுக்காதபோது,
ஒட்டுமொத்த தமிழ்த திரையுலகமும், விவசாயப் பெருங்குடி மக்களும், தமிழ்உணர்வாளர்களுமான இரண்டு லட்சத்துக்கும் மேலான என்இனிய தமிழ் மண்ணின் மைந்தர்கள், கை கோர்த்து நடத்திய உணர்வுப்பூர்வமானமிகப் பெரிய பயணம் அது.
அதற்கு தலைமை தாங்கிய பெருமை எனக்கு எப்போதும் உண்டு.
தமிழ்த் திலையுலகின் எல்லாக் கலைஞர்களும் ஒரு சேர திரண்ட விழா அது என்பதால்பொறுப்புணர்ச்சியோடு அந்த பேரணிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை அப்போதையமுதல்வர் புரட்சித் தலைவி ஜெயலலிதா செய்து தந்தார்.
யாரும் பின்ணிருந்து என்னை இயக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள்குறிபபிட்டவர்களும் இல்லை. நான் பிறப்பால் தமிழன். தமிழ் கிராம தெருக்களையேபள்ளிக் கூடங்களாக படித்து வளர்ந்து வந்தவன். இந்த மண் என்னை நேசிக்கிறது.நான் இந்த மண்ணை நேசிககிறேன். இந்த மக்கள என்னை நேசிக்கிறார்கள்.
என்னுடைய 40 ஆண்டு கால கலையுலகிலும் சரி, என் தமிழ் மக்களோடு இரண்டறக்கலந்த, கலை, கலாச்சார பண்பாட்டுப் பரிவர்த்தனைகளிலும் சரி என்னைப் பற்றியநிர்வாண உண்மைகள் என் இனிய தமிழ் மக்களுககுத் தெரியும்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், முத்தமிழறிஞர் கலைஞர், நடிகர் திலகம் சிவாஜிகணேசன், புரட்சித் தலைவி ஜெயலலிதா,மக்கள் தலைவர் மூப்பனார், தோழர்கள்நல்லகண்ணு, சங்கரய்யா, டாக்டர் ராமதாஸ், வைகோ, திருமாவளவன் என்று கட்சிபாகுபாடின்றி எல்லாத் தலைவர்களோடும் பாகுபாடின்றி நெருங்கிப் பழகுகிறவாய்ப்பை பெற்றுத் தந்த கலையுலகம்தான் இந்த் பேரணிக்கு தலைமை தாங்குகிறவாய்ப்பையும் பெற்றுத் தந்தது.
யாரிடமும், எந்த எதிர்பார்ப்பும் இல்லாத, எந்த நிழல் குடையிலும் நிற்காத,யாருக்கும் கை கட்டாத ஒரு தன்மானத் தமிழன் என்பதில் எனக்கு நானே கம்பீரமாககர்வப்பட்டுக் கொள்வது உண்டு.
இன உணர்வையும், மொழி உணர்வையும் இந்த மண்ணின் நுகர்வையும் யாரும்சொல்லிக் கொடுத்த வருவதிலலை. அது பிறப்பால் வருவது. அந்த உணர்வின்அடிப்படையில்தான் எனது பேட்டி வெளியானது.
இன்றளவும் இருபதுஆண்டுகளுக்கு மேலாக புலம் பெயர்ந்து, நிற்க நாதியில்லாதுஉயிரைக கையில் பிடிததுக் கொண்டு நாலா திசையிலும் சின்னாபின்னப்பட்டுக்கிடக்கிற என்தமிழ் சமுதாயத்தை ஒரு இனத்தை நம்மில் பெரியவர் யாராவதுகாப்பாற்றி விட மாட்டாரா என்ற ஆதங்கத்தில் கொடுத்த பேட்டி அது. அதைகொச்சைப்படுத்தாததீர்கள்.
ஜெயலலிதா, வைகோ, விடுதலைப் புலிகள். இந்த ஆடு புலி ஆட்டவிளையாட்டுக்களை அன்பு கூர்ந்து அரசியல் உலகில் மட்டம் வைத்துககொள்ளுங்கள். உண்மையான தமிழ் உணர்வாளர்களை ஊனப்படுத்த வேண்டாம்என்று தாழ்ச்சியுடன் கேட்டுக் கொள்கிறேன்.
அரசியல், பணம் என உங்களுக்கு எத்தனையோ வழிகள் உள்ளன. நான் வேண்டாம்என்று கூறியுள்ளார் பாரதிராஜா.












Click it and Unblock the Notifications