உள்ளாட்சி தேர்தல்-அதிமுக கூட்டணியில் கார்த்திக்?
சென்னை:
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் கார்த்திக் இடம் பிடிப்பார் என்று தெரிகிறது.
தமிழக பார்வர்டு பிளாக் கட்சி தலைவரான கார்த்திக் கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற முயன்றார். இதற்காக சசிகலாவின் கணவர் நடராஜன், மதுரை ஆதீனம் ஆகியோர் தீவிரமாக முயன்றனர்.நடராஜனின் உதவியால் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து கூட்டணி பேசப் போனகார்த்திக்க்கு போயஸ் கார்டனில் நோஸ்-கட் தான் கிடைத்தது. கூடவே பார்வர்ட் பிளாக் பிரிவுத் தலைவர்சந்தானத்தை வைத்துக் கொண்டு பேசிய ஜெயலலிதா, 2 சீட் தர்றேன். ஒன்று சந்தானத்துக்கு இன்னொன்றுஉங்களுக்கு என்றார்.
மேலும் சந்தானத்துடன் இணைந்து தான் செயல்பட வேண்டும் என்று கார்த்திக்குக்கு உத்தரவும் போட்டு நாலுதிட்டும் திட்டி அனுப்பினார். இதையடுத்து தனித்துப் போட்டி என்று இறங்கி தேர்தலில் படுதோல்வியை சந்தித்தார்கார்த்திக். இவரை நம்பி போட்டியிட்ட அனைவரும் டெபாசிட்டை இழந்தனர். இதையடுத்து செல்லாகாசானார்கார்த்திக்.
இந் நிலையில் சட்டமன்ற தேர்தல் தோல்வியால் பாடம் பயின்ற ஜெயலலிதா, உள்ளாட்சித் தேர்தலில் திமுககூட்டணிக்கு எதிரான ஓட்டுக்கள் எந்த வகையிலும் பிரிந்துவிடக் கூடாது என்பதில் தீவிரமாக உள்ளார்.விஜய்காந்தை வளைக்க ஒரு பக்கம் முயற்சி நடந்தாலும் அவர் பிடி கொடுக்கிற மாதிரி இல்லை.
இதனால் கார்த்திக்கை மீண்டும் அதிமுக கூட்டணிக்கு கொண்டு போகும் வேலையில் நடராஜன்தீவிரமாகியுள்ளார்.
சமீபத்தில் நெல்லை மாவட்டம் நெல்கட்டும்சேவல் பகுதியில் நடந்த பூலித்தேவன் பிறந்த நாள் விழாவைநடத்தினார் நடராஜன். இதில் கார்த்திக்கையும் கலந்து கொள்ளச் செய்து அசத்தினார்.
அப்போது அதிமுகவுடன் கூட்டணியில் இணையும்படி கார்த்திக்கை நடராஜன் வற்புறுத்தியதாக கூறுப்படுகிறது.இதற்கு கார்த்திக்கும் ரெடியாகிவிட்டதாகத் தெரிகிறது.
தனது தன்மானத்துக்கு பிரச்சனை வராத வகையில் நடப்பட்டால் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதில் எந்தசிக்கலும் இல்லை என்று கார்த்திக் கூறியுள்ளதாகத் தெரிகிறது. இந்த முறை ஜெயலலிதாவின் அனுமதியுடனேயேநடராஜனை கார்த்திக் வளைத்து வருகிறார் என்பதால் விரைவில் அதிமுக கூட்டணியில் ஐக்கியமாகும் படலம்நடக்கும் என்று தெரிகிறது.
வரும் 13ம் தேதி தனது பிறந்த நாள் விழாவின்போது அதிமுகவுடன் கூட்டணி குறித்த அறிவிப்பை அவர்வெளியிடலாம் என்று தெரிகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications