அவருக்கு 7 நாள் எனக்கும் 7 நாள்: விஜயகாந்த்
தேவகோட்டை:
திராவிடன் பிரச்சினை குறித்து முதல்வர்கருணாநிதி கூறியுள்ள பதிலுக்கு வரும்17ம்தேதி நான் விளக்கம்அளிப்பேன் என்று நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
விஜயகாந்த் கட்சியின் பெயரில் மட்டும் தான் திராவிடம் இருக்கிறதே தவிர, அவரதுகட்சிக்கும் திராவிடத்துக்கும் என்ன சம்பந்தம் என்றரீதியில் கேள்வி எழுப்பினார்கருணாநிதி.இதற்குப் பதிலளித்த விஜயகாந்த், நான் திராவிடன்தான், எனது கட்சியும் திராவிடக்கட்சிதான் என்று கூறியிருந்தார்.
இதற்குப் பதில் அளித்த முதல்வர் கருணாநிதி, விஜயகாந்த் திராவிடன் இல்லை என்றுநான் ஒருபோதும் சொல்லவில்லை என்றார்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்டம், செங்கற்கோவில் கிராமத்தில் தர்மபுரிபடப்பிடிப்பில் இருந்த விஜயகாந்த்திடம் கேட்டபோது, நான் படப்பிடிப்பில் தீவிரமாகஉள்ளேன்.
எனவே கருணாநிதியின் அறிக்கையை முழுமையாக படிக்கவில்லை. இப்பிரச்சினைஏற்பட்டு 7 நாட்கள் கழித்துத்தான் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார். எனவேநானும் 7 நாட்கள் கழித்தே பதில் சொல்வேன்.
17ம் தேதி நெல்லையில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் இதற்குப் பதில் சொல்கிறேன்.தேவைப்பட்டால் அதற்கு முன்பே கூட பதில் சொல்வேன். உள்ளாட்சித் தேர்தல்பற்றியும், கருணாநிதி அறிக்கை பற்றியும் அங்கு நான் பேசுவேன் என்றார்.












Click it and Unblock the Notifications