ஜெ சிறுபான்மையினரின் ஜென்ம விரோதி-கருணாநிதி
சென்னை:
ஜெயலலிதா தாழ்த்தபட்டோர், சிறுபான்மையினரின் ஜென்ம விரோதி என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,என்னிடம் முதன்மைச் செயலாளராக உள்ளவரும் தமிழக அரசின் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவருமானசையத் முனீர் ஹோதாவைப் பற்றி பயங்கர குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார் ஜெயலலிதா.
இதன் மூலம் ஜெயலலிதா எந்த அளவுக்கு ஆழமான சிறுபான்மையோர் விரோதி என்பதற்கு அடுக்கடுக்கானசான்றுகளைக் கூறி தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா ஒரு அறிக்கைவெளியிட்டுள்ளார்.
சிறுபான்மை மக்களின் சினேகிதி போல சிலிர்த்துக் காட்ட ஜெயலலிதாவுக்கு எல்லாவிதமான சாமர்த்தியங்களும்உண்டு. அதுவும் தேர்தல் வந்துவிட்டால் அவருக்கு அப்போது தான் சிறுபான்மை மக்கள் மீது அக்கறையும்ஆசையும் கூடை கூடையாக வந்து கொட்டும்.
திடீரென ஒரு நாள் வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு போவார். மறுநாள் தர்ஹாவுக்கு பய பக்தியோடுசெல்வார். மறைந்த கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் நினைவும் தேர்தல் வந்துவிட்டார் ஜெயலலிதாவுக்குவந்துவிடும். ஒரு மலராடை எடுத்துக் கொண்டு அவரது நினைவிடத்துக்குப் போவார்.
ஆனால், சிறுபான்மையினர் சமுதாய பிரச்சனைகளை எப்படியெல்லாம் அலட்சியப்படுத்தினார், அவர்களைஎப்படி ஓரம் தள்ளினார் என்பதற்கு இதோ ஒரு உதாரணம்.
ஐ.நா. பரிந்துரைப்படி ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 18ம் தேதி சிறுபான்மையோர் உரிமை நாள்கடைபிடிக்கப்பட வேண்டும் என மாநில அரசுகளை தேசிய சிறுபான்மையோர் ஆணையம் 2001ம் ஆண்டுகேட்டுக் கொண்டது.
அதன் அடிப்படையில் சிறுபான்மையோர் உரிமை நாள் கொண்டாட மாவட்டத்துக்கு ரூ. 2,000 வீதம் 30மாவட்டங்களுக்கும் ரூ. 60,000 நிதி ஒதுக்கக் கோரி முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு அனுப்பப்பட்டது.
ஆனால், அந்த கோப்பை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு திருப்பி அனுப்புகிறார் ஜெயலலிதா. இதைடுத்துமீண்டும் அந்தக் கோப்பு தலைமைச் செயலாளர் மூலமாக முதல்வருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அதில்ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை கடைசி வரை கையெழுத்தே போடவில்லை.
அதில் நான் தான் கடந்த 6ம் தேதி கையெழுத்து போட்டேன். 4 வருடம் இந்த சிறுபான்மையோர் உரிமை நாள்கோப்பில் கையெழுத்தே போடாமல் அலட்சியப்படுத்தியவர் தான் இந்த ஜெயலலிதா.
அந்த சமுதாயத்தின் உரிமையை நிலை நாட்ட ஐ.நா. சொன்ன ஒரு சிறிய பரிந்துரைக்கே இந்த கதி என்றால்ஜெயலலிதா சிறுபான்மையினரின் சினேகிதியா? அல்லது அந்த மக்களின் நிழல் கூட தன் மீது படக் கூடாதுஎன்று ஒதுங்கிச் செல்லும் விரோதியா என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
மேலும் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அமைச்சரவையில் இடம் தந்து அதை சிலமாதங்களிலேயே பறித்துக் கொண்டவர் தான் ஜெயலலிதா.
அதே போல ஏடிஜிபியாக இருந்த ஐபிஎஸ் அதிகாரி ஜெகன் மீது வந்த புகார்கள் தவறு என்று விஜிலென்ஸ்கமிஷ்னர் அறிக்கை கொடுத்த பிறகும், ஜெகன் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அதிகாரி என்பதால்அவருக்கு உரிய பதவி உயர்வு வழங்கும் ஆணையிலும் ஜெயலலிதா கையெழுத்திடவில்லை.
போதாக்குறைக்கு முடி திருத்துவோரிடமும் மோதிக் கொண்டிருக்கிறார்.
சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர் தவிர, முடி திருத்துவோருக்கும் தான் ஒரு ஜென்ம விரோதி என்பதைஜெயலலிதா தனது செயல்கள் மூலம் காட்டிவிட்டார் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications