கம்ப்யூட்டர்மயமாகும் ரேசன் கடைகள்: ரூ. 222 கோடி செலவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தில்லுமுல்லு, மோசடிகளைத் தடுக்க ரேசன் கடைகளை கம்ப்யூட்டர்மயமாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.இதற்காக ரூ. 222 கோடி செலவிடப்படவுள்ளது.

மேலும் ரேசன் கடைகளில் பொருட்களை சரியான எடையில் வழங்கவும், எடை குறைவை தவிர்க்கவும் நவீனஎலெக்ட்ரானிக் தராசுகள் அறிமுகப்படுத்தவுள்ளன.

தமிழ்நாட்டில் மொத்தம் 1.89 கோடி ரேசன் கார்டுகள் உள்ளன. மொத்தம் 28,000 ரேசன் கடைகள் உள்ளன.

ரேசன் கடைகள் உணவுத்துறையின் கீழ் வருகின்றன. இந்தக் கடைகளில் நடக்கும் திருட்டுக்கள், மோசடிகள்,ஊழல்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

அரிசி, மண்ணெண்ணையை அளவு குறைத்துப் போடுவதில் ஆரம்பித்து நாம் வாங்காத பொருளையும் சேர்த்துநம் கார்டில் பதிவது வரை பல மோசடிகள் நடக்கின்றன. மேலும் மாதம் ஒருமுறை தான் நிர்வாக அலுவலகத்தில்இருந்து ரேசன் கடையில் உள்ள ஸ்டாக் விவரமும் விற்கப்பட்ட பொருள்கள் குறித்தும் விவரம் கேட்கப்படும்.

ஒரு மாத காலம் என்பது நீண்ட அவகாசம் என்பதால் ஸ்டாக்குகளில் செய்யும் குளறுபடிகள், கள்ள மார்க்கெட்டில்விற்பது போன்ற தில்லுமுல்லுகளை மாதக் கடையில் சரி செய்து, கணக்கை நேர் செய்து காட்டி விடுவர் ரேசன்கடை ஊழியர்கள்.

இந் நிலையில் ஒவ்வொரு ரேசன் கடையிலும் உள்ள ஸ்டாக், விற்கப்பட்ட பொருட்கள், இருப்பில் உள்ளதொகை, எந்தப் பொருளை யார் வாங்கினார்கள் ஆகியவற்றை எந்த நேரத்திலும் நிர்வாக அலுவலகம் தெரிந்துகொள்ளும் வகையில் ரேசன் கடைகளை கம்ப்யூட்டர்மயமாக்கி நெட்வொர்க் ஏற்படுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இதற்காக ரூ. 222 கோடி செலவிடப்படவுள்ளது.

இந்த திட்டத்தின்படி உணவு பொருள் வழங்கள் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கூட்டுறவுசங்கங்கள் ஆகியவற்றின் பணிகள் கம்ப்யூட்டர்கள் மூலம் ஒருங்கிணைக்கப்படும்.

பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேசன் கடைகளுக்கு வழங்கப்படும் பொருட்கள், ரேசன் கார்டுகளுக்குவினியோகிக்கப்பட்ட பொருட்கள், கடைகளில் இருப்பில் உள்ள பொருட்கள், எந்தந்த பகுதிகளில் எவ்வளவுபொருள் வினியோகிக்கப்படுகிறது போன்ற விவரங்கள் கம்ப்யூட்டர்கள் மூலம் துல்லியமாக கண்காணிக்கப்படும்.

மேலும் ரேசன் ஊழியர்கள் ஏராளமான பதிவேடுகளை பராமரிக்கும் பணிச் சுமையும் குறையும்.

ரேசன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை சரியான எடையில் வழங்கவும், எடை குறைவை தவிர்க்கவும்நவீன மின்னனு தராசு படிப்படியாக அறிமுகப்படுத்தவுள்ளன. இந்த ஆண்டில் 2,000 ரேசன் கடைகளுக்கு ரூ. 1கோடி செலவில் மின்னனு தராசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+