தமிழில் திருமண உறுதிமொழி எடுத்த ஜோதிகா
சென்னை:
நடிகர் சூர்யா-நடிகை ஜோதிகா திருமணம் நேற்று சென்னையில் நடந்தது.
அடையாறு பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் வேத மந்திரங்கள் ஓத சம்பிரதாய முறைப்படி இந்தத் திருமணம்நடந்தது.இதில் ஒரு தமிழ் அறிஞர், திருமண ஒப்பந்த உறுதிமொழி பத்திரத்தை படிக்க, அதை ஜோதிகாவும், சூர்யாவும்திரும்ப சொன்னார்கள். மும்பையை சேர்ந்த இஸ்லாமிய பெண்ணான ஜோதிகா, தமிழ் வார்த்தைகளை மிகஅழகாக உச்சரித்து அசத்தினார்.
அந்த திருமண உறுதிமொழி வாசகங்கள் வருமாறு,
ஜோதிகா ஆகிய நான் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்கிற அருங் குணங்கள் நான்கில் இருந்தும் சற்றும்பிறழாமல் இருப்பேன்.
தற்காத்து தற்கொண்டாற் பேணி தகை சார்ந்த சொற்காத்து சோர்வில்லாதவளாக, பெண்ணின் பெருந்தக்க யாவுளஎன்று பெரியோர்கள் போற்றும் வண்ணம் என் கைபிடித்த இவருடைய காரியம் யாவிலும் கைகொடுத்து, இந்தஇல்லத்தின் மாட்சியினை பெரியோர்கள் போற்றும் வண்ணம் எய்துவேன் என்று உறுதி கூறுகிறேன்.
இதற்கு என் முன்னே எழுந்தருளியுள்ள செந்தமிழ் சிவம் சாட்சி. இந்த அவையினர் சாட்சி, தமிழக முதல்வர்சாட்சி, இந்த பேரண்டத்தின் கூறான நிலம், நீர், தீ, வளி, வான் சாட்சி, செந்தமிழ் திருமறைகள் சாட்சி என்று உறுதிகூறுகிறேன் என்று ஜோதிகா உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.முன்னதாக ஜோதிகாவை அவரது சகோதரியும் நடிகையுமான நக்மா மேடைக்கு அழைத்து வந்தார். வெட்கத்தில்தலை குனிந்தபடி ஜோதிகா தனது பெற்றோரின் காலிலி விழுந்து வணங்கினார்.
இதையடுத்து தாலியை தட்டில் வைத்து எடுத்துச் சென்ற சிவக்குமார் முதல் வரிசையில் அமர்ந்திருந்த முதல்வர்கருணாநிதி உள்ளிட்டவர்களிடம் ஆசி வாங்கினார். காலை 7 மணிக்கு ஜோதிகாவுக்கு சூர்யா தாலி கட்டினார்.
இதைத் தொடர்ந்து கருணாநிதியின் காலில் விழுந்து சூர்யா-ஜோதிகா ஜோடி ஆசி பெற்றனர். இருவருக்கும்பூங்கொத்து கொடுத்து வாழ்த்திய கருணாநிதி, சூர்யாவின் கையை முத்தமிட்டு அவரது கன்னத்தை தட்டிக்கொடுத்தார். இதையடுத்து ஜோதிகாவும் சூர்யாவும் மாலை மாற்றிக் கொண்டனர். பின்னர் இருவரின்உறவினர்களும் மண மக்களை வாழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேரில் வந்து சூர்யா-ஜோதிகாவை வாழ்த்தினர்.
பின்னர் இளையராஜா, கமல், ரஜினி, சத்யராஜ், அஜீத், பிரபு, சரத்குமார், ராதிகா, மனோரமா, சத்யராஜ்உள்ளிட்டோர் குடும்பத்துடன் வந்து புதுமணத் தம்பதியை வாழ்த்தினர்.
மேலும் விஜய், மாதவன், ஜெயம் ரவி, தனுஷ், பிரகாஷ்ராஜ், சிபிராஜ், அப்பாஸ், சத்யன், வையாபுரி, நடிகைகள்ராதிகா, அசின், குஷ்பு, மனோரமா, சரண்யா ஆகியோரும்
தயாரிப்பாளர்கள் ஏவிஎம்.சரவணன், ராம. நாராயணன், அன்பாலயா பிரபாகரன், காஜாமைதீன், சிவசக்திபாண்டியன், கேஎஸ்.சீனிவாசன், செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன், ராஜ்கண்ணு உள்ளிட்டோரும் வாழ்த்துதெரிவித்தனார்.
டைரக்டர்கள் பாலுமகேந்திரா, மணிரத்னம், பாலா, எஸ்பி.முத்துராமன், விக்ரமன், சுந்தர்.சி, அமீர்,ஆர்வி.உதயகுமார், வசந்த், பிரியதர்ஷன் உள்ளிட்ட ஏராளமான பிரமுகர்கள் வந்து வாழ்த்து தெரிவித்தனார்.
மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன், வாசன், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு உள்ளிட்டவர்களும்வந்திருந்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications