மணவை முஸ்தபா தலைமையில் அறிவியல் தமிழ்கவுன்சில்: தமிழன்பன், சுப.வீ உறுப்பினர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அறிவியல் தமிழை ஊக்குவிக்கும் வகையில் அறிவியல் தமிழ் கவுன்சில் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதன் தலைவராக பிரபல தமிழறிஞர் மணவை முஸ்தபாவை முதல்வர் கருணாநிதி நியமித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,அறிவியல் தமிழை மேம்படுத்தும் வகையில் இந்த கவுன்சில் அமைக்கப்படும் என பட்ஜெட்டில்அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் இந்த கவுன்சில் மணவை முஸ்தபா தலைமையில்அமைக்கப்படுகிறுத.
பேராசிரியர் பாலசுபிரமணியம் இதன் துணைத் தலைவராகவும், ஈரோடு தமிழன்பன், பாடலாசிரியர் மேத்தா,பேராசிரியர் சுப.வீரபாண்டியன், டாக்டர் கந்தராஜ், சாராத நம்பி ஆருரன், டாக்டர் சாமுவேல் ஆகியோர் இதன்உறுப்பினர்களாகவும் இருப்பர்.
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர் இதன் உறுப்பினர்-செயலாளராக இருப்பார் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications