கட்டை விரல் துண்டானது: மலேசியாவில் பரிதவிக்கும் தமிழக வாலிபர்
திருச்சி:
பெரம்பலூரைச் சேர்ந்த ஒரு வாலிபரின் கட்டை விரல் துண்டான நிலையிலும் அவரை தொடர்ந்து வேலை செய்யசொல்லி மலேசியாவில் ஒரு நிறுவனம் கொடுமைப்படுத்தி வருகிறது.
பெரம்பாலூர் மாவட்டம் உடையார்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திக் கடந்த மே மாதம் மலேசியா சென்றார்.அங்குள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சமீபத்தில் பணியின்போது ஏற்பட்டவிபத்தில் கார்த்திக்கின் கட்டை விரல் இயந்திரத்தில் சிக்கி துண்டாகிவிட்டது.இதனால் அவர் சாப்பிடக்கூட முடியாமல் அவதிக்குள்ளானார். இதனால் ஊருக்கு திருப்ப முடிவு செய்து தனதுநிறுவனத்திடம் தெரிவித்தார்.
ஆனால், ஏஜெண்டு தான் உன்னை இங்கிருந்து விடுவிக்க வேண்டும், நீ போக வேண்டுமென்றால் இன்னொருநபரை அந்த ஏஜெண்ட் கொண்டு வந்துவிட வேண்டும் என்று கூறிவிட்டனர். இதையடுத்து ஏஜெண்டை அவர்தொடர்பு கொண்டபோது அவர் பதிலே சொல்லவில்லை.
பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் ஏஜென்டிடம் சிக்கிக் கொண்டதால் கார்த்திக்கால் நாடு திரும்ப முடியாதநிலை.
இதற்கிடையே விரல் துண்டாகிவிட்ட நிலையிலும் தன்னை தொடர்ந்து வேலை செய்ய சொல்லி அந்த நிறுவனம்கொடுமைப்படுத்தி வருவதாக பெற்றோரிடம் அழுதபடியே தொலைபேசியில் தெரிவித்துள்ளார் கார்த்திக்.
தன்னை காப்பாற்றும்படி முதல்வர் கருணாநிதிக்கும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும் கார்த்திக் கடிதம்அனுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications