முனீர் ஹோதா ஒரு தேச துரோகி: ஜெயலலிதா
சென்னை:
இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர தீர்வை தரும் வகையில் இந்தப் பிரச்சனையில் மத்திய-மாநில அரசுகள் தங்களைஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுகவின் செயற்குக் கூட்டம் இன்று நடந்தது.ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் அவைத் தலைவர் காளிமுத்து தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தலைமை செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டசசிகலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்க வந்த ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் அதிமுகவினர் மிகச் சிறந்த வரவேற்பளித்தனர்.
இக் கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கிய தீர்மானங்கள்:
மேயர், நகராட்சித் தலைவர்களை தேர்தலின் மூலமாகவே நேரடியாக தேர்வு செய்ய வேண்டும்.
பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கும் வகையில் உடனே மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சட்டம்கொண்டு வர வேண்டும்.
தேர்தல் நேரத்தில் திமுக அளித்த வாக்குறுதியின்படி விவசாயிகளின் மொத்தக் கடனான ரூ. 22,220கோடியையும் தமிழக அரசு ரத்து செய்ய வ்ேடும்.
போர்க் கால அடிப்படையில் நதிகள் இணைப்புத் திட்டத்தை மேற்கொண்டு, முதல் கட்டமாக தென்னிந்தியநதிகளை இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜிவ் காந்தி படுகொலைக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் எதிர்ப்பு விஷயத்தில் அதிமுக உறுதியானநிலைப்பாட்டை தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. அதே நேரத்தில் இலங்கையில் அப்பாவித் தமிழர்களுக்குஎதிரான கொடுமைகளையும் அநீதிகளையும் வன்மையாக கண்டித்து வருகிறோம்.
இலங்கையில் இப்போது தமிழர்கள் பல துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதுவரை 10,000க்கும்மேற்பட்டவர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர். அவர்களுக்கு உரிய உதவிகளை மத்திய, மாநில அரசுகள்செய்து தர வேண்டும்.
இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர தீர்வை தரும் வகையில் இந்தப் பிரச்சனையில் மத்திய-மாநில அரசுகள் தங்களைஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஜெ. பேட்டி:
செயற்குழு கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் ஜெயலலிதா கூறியதாவது:
கேள்வி: விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்று சொல்லி இருக்கிறீர்களே? எதை வைத்து சொன்னீர்கள்?
பதில்: பொதுவாக சொல்லி இருக்கிறேன். ஆருடமாக சொல்லவில்லை. விரைவில் சட்டசபை தேர்தல் வந்தால்நல்லது தானே.
கேள்வி: உங்கள் ஆட்சியில் சென்னையில் இருந்து ஆயுதம் கடத்தப்பட்டதாக டிஜிபி கூறியிருக்கிறாரே?
பதில்: முதல்வர் பதில் சொல்ல முடியாததால் போலீஸ் டிஜிபி, தலைமை செயலாளர், உள்துறை செயலாளர்போன்றோரை வைத்து அறிக்கை விட வைக்கிறார். இது வெட்க கேடானது. தேவைப்பட்டால் அமைச்சர்களைவைத்து பதில் சொல்லலாம். அதை விட்டு அதிகாரிகளை வைத்து அறிக்கை விடுவது கண்டனத்துக்குறியது.
சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு ராக்கெட்டுகள் அனுப்பட்டது இப்போது தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதற்கு நான் கண்டனம் தெரிவித்தேன. இந்த சம்பவத்தால் இந்திய அளவில் கருணாநிதிக்கு தலைகுனிவுஏற்ப்பட்டுள்ளது. இதனால் எனது ஆட்சியில் இது நடந்ததாக என் மீது பழி போட நினைக்கிறார்.
அதற்காக அதிகாரிகளை வைத்து இதை சொல்ல சொல்கிறார். எனது ஆட்சியில் இது நடைபெறவில்லை. அப்படிநடைபெற்று இருந்தால் 5 ஆண்டு ஆட்சி காலத்தில் எனக்கு தெரியாமல் இருந்திருக்காது. எனது ஆட்சியில்இப்படிப்பட்ட சம்பவம் எதுவும் நடைபெறவில்லை.
கேள்வி: முனீர் ஹோடா மீது நீங்கள் நடவடிக்கை எடுத்ததை கருணாநிதி குறை சொல்லி இருக்கிறாரே?
பதில்: இது பற்றி பேச அவருக்கு தகுதி இல்லை. மதானி என்ற தீவிரவாதி 1998ல் கோவையில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். அவரை விடுவிக்க பல விதத்தில் எனக்குநெருக்கடி வந்தது. மத்திய அரசு அரசு குறிப்பாக காங்கிரஸ் அவரை விடுவிக்க முயற்சி செய்தது. ஆனால் அதைநான் ஏற்கவில்லை.
மாதனி பல முறை ஜாமீனில் வெளிவர முயன்றும் நீதிமன்றத்தில் அனுமதிக்கவில்லை. நான் முதல்வராக இருந்தபோது மாதனி கோவை மத்திய சிறை வளாகத்தில் தான் இருக்க வேண்டும் என்று நான் வகித்து வந்த உள்துறைமூலம் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
சிறுபான்மை பிரிவை சேர்ந்த முனீர் ஹோடாவை அவர் மீது நம்பிக்கை வைத்து உள்துறை செயலாளராக்கியதுநான் தான். ஆனால் அவர் உள்துறை பிறப்பித்த ஆணைக்கு எதிராக மாதனி கோவை சிறை வளாகத்தை விட்டுவெளியே வரலாம் என்று ஒரு ஆணையை எனக்கும், தலைமை செயலாருக்கும் தெரியாமல் பிறப்பித்தார்.
இது போல மதானிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று அரசு ஆட்சேபனை தெரிவித்தது. ஆனால் ஆட்சேபனைஇல்லை என்றும், மதானி சென்னை வருவதற்கு எதுவாகவும் உத்தரவை எனக்கும், தலைமை செயலாளருக்கும்தெரியாமல் பிறப்பித்தார். இது மதானியை தப்ப வைக்கும் முயற்சி.
இதன் காரணமாகவே அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவரை சஸ்பெண்டு செய்தது போதாதது.டிஸ்மிஸ் செய்து இருக்க வேண்டும். தேச துரோகியான முனீர் ஹோதாவின் பின்னணியில் தான் கருணாநிதிதலைமையில் ஆட்சி நடக்கிறது.
கேள்வி: விடுதலைப் புலிகளை நீங்கள் எதிர்கிறீர்களா?
பதில்: இலங்கை தமிழர்கள் சம உரிமை பெற்று நிம்மதியுடன் வாழ வேண்டும். இலங்கை தமிழர் பிரச்சனைக்குநல்ல தீர்வு காண வேண்டும் என்பது எங்கள் விருப்பம். ஆனால் பயங்கரவாதம், தீவிரவாதம், வன்முறைஆகியவற்றை அதிமுக எதிர்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கம ஒரு தீவிரவாத இயக்கம். அதை இப்போதும்நாங்கள் எதிர்கிறோம்.
விடுதலைப் புலிகளுக்கு தடை விதிக்க நான் தான் காரணம். ஆனால் முதல்வர் கருணாநிதி புலிகளுக்கு தடைவிதிக்கப்பட்டது விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் என்று சட்டசபையில் சொல்லி இருக்கிறார். இதற்குஅவரிடம் தான் விளக்கம் கேட்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications