கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை: 2 ரயில் பெட்டிகள், 30 குடிசைகள் சாம்பல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே கர்ப்பிணிப் பெண் தீக்குளித்துத்தற்கொலை செய்து கொண்டபோது ஏற்பட்ட தீவிபத்தில் ரயில் நிலையத்தில்நன்றிருந்த 2 ரயில் பெட்டிகள், 30 குடிசைகளும் எரிந்து போயின.

கோடம்பாக்கம் ரயில் நிலையத்தை ஒட்டி திடீர் நகர் என்ற குடிசைப் பகுதி உள்ளது.கிட்டத்தட்ட 200க்கும் மேற்படட் குடும்பங்கள் இங்கு வசித்து வருகின்றன.

அங்குள்ள ராமகிருஷ்ணா தெருவில் வசித்து வருபவர் ஐயப்பன். பெயிண்டரானஇவரது மனைவி பச்சையம்மாள். 20 வயதான பச்சையம்மாளுக்கு திருமணமாகி ஒருவருடம்தான் ஆகிறது.

தற்போது ஐந்து மாத கர்ப்பமாக இருந்தார். பச்சையம்மாளின் தாயார் வீடும் ஐயப்பன்வசித்து வந்த வீட்டுக்கு எதிரேதான் உள்ளது. பச்சையம்மாளுககும், ஐயப்பனுக்கும்இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

இதேபோல ஞாயிற்றுக்கிழமை இரவும் தகராறு ஏற்பட்டது. அக்கம் பக்கத்துகுடிசைகளில் இருந்தவர்கள் இருவரையும் அமைதிப்படுத்தினர்.

நேற்று காலை ஐயப்பன் வேலைக்கு போகும்போதும் மனையுடன் சண்டைபோட்டுள்ளார்.

இந் நிலையில் அவர் வீட்டை விட்டுப் போனதும், பச்சையம்மாள் உடலில்மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார். இதில் பச்சையம்மாளும் அவரதுகுடிசையும் தீப் பிடித்துக் கொண்டது.

இந்தத் தீ பக்கத்து குடிசைகளுக்கும் பரவியது. இதையடுத்து அங்கு வசித்துவந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். பலர் பொருட்களை மீட்க முயன்றனர்.

ஆனால் தீ அதி வேகமாக பரவியதால் பொருட்களை விட்டு விட்டு உயிர் தப்பிஓடினர். மொத்தம் 30 குடிசைகள் இந்த சம்பவத்தில் கருகின.

இந்த குடிசைகளை ஒட்டி நின்றிருந்த ஒரு ரயிலின் 2 பெட்டிகளுக்கும் தீ பரவியது.இதில் 2 பெட்டிகள் எரிந்துபோயின.

8 வண்டிகளில் வந்த தீயணைப்பு படையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயைஅணைத்தனர்.

தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து போலீஸார் விசாரணைநடத்தியபோதுதான், பச்சையம்மாள் தனது குடிசைக்குள் உட்கார்ந்த நிலையில்கரிக்கட்டையாக பிணமாகக் கிடந்தது தெரிய வந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+