மலையிலிருந்து தள்ளிவிட்டு வாலிபர் கொலை?
சென்னை:
சென்னையில் காணாமல் போன புது மாப்பிள்ளை திரிசூலம் மலை அடிவாரத்தில் உடல் சிதைந்த நிலையில்இறந்து கிடந்தார்.
அவரை யாராவது மலை உச்சியில் இருந்து தள்ளி கொலை செய்தார்களா அல்லது இது தற்கொலையா என்றுபோலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பம்மல் பகுதியைச் சேர்ந்தவர் உமாசங்கர் (28). பிபிஏ பட்டதாரியான இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவந்தார்.
உமா சங்கருக்கும், நெல்லையைச் சேர்ந்த சுமலதா (23) என்பவருக்கும் 2 மாதங்களுக்கு முன்பு திருமணம்நடந்தது. கடந்த சனிக்கிழமை காலை 11 மணியளவில் வேறொரு நிறுவன இன்டர்வியூக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற உமாசங்கர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்தும் உமா சங்கர் கிடைக்கவில்லை. இதனால்போலீசில் புகார் கொடுத்தனர்.
அப்போது திரிசூலம் மலை அடிவாரத்தில் ஒரு வாலிபர் இறந்து கிடப்பதாக தகவல் வந்துள்ளது. நீங்கள்பல்லாவரம் காவல் நிலையத்துக்கு சென்று விசாரித்துப் பாருங்கள் என்று கூறி அவர்களை போலீசார் அங்குஅனுப்பி வைத்தனர்.
இதையடுத்து உமாசங்கரின் பெற்றோர் பல்லாவரம் காவல் நிலையத்துக்கு சென்றனர். குரோம்பேட்டை அரசுமருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த ஒரு சடலத்தை அவர்களிடம் போலீசார் காட்டினர். இறந்துபோன் நபர் அணிந்திருந்ததாக கூறி ஒரு மைனர் செயின் மற்றும் மோதிரத்தையும் காட்டினர்.
அதைப் பார்த்ததும் இறந்து போனது உமா சங்கர்தான் என்பதை அவரது பெற்றோர் உறுதி செய்தனர். திரிசூலம்மலை கிழக்கு சரிவில் கல் வெட்டி எடுக்கப்பட்டதில் சுமார் 150 அடி பள்ளம் உள்ளது. தண்ணீர் இன்றி புதர் மண்டிகிடக்கும் இந்தப் பகுதியில் இருந்துதான் உடல் சிதைந்த நிலையில் உமா சங்கரின் உடலை போலீசார்கண்டெடுத்துள்ளனர்.
உமா சங்கரை யாராவது மலை உச்சியில் இருந்து தள்ளி கொலை செய்தார்களா அல்லது அவர் தற்கொலைசெய்து கொண்டாரா என்று தெரியவில்லை.
இதுகுறித்து உமாசங்கரின் தந்தை சுடலை கூறுகையில், தற்கொலை செய்யும் அளவுக்கு உமா சங்கருக்கு எந்தபிரச்சனையும் இல்லை. அவன் சாவில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications