ஜனாதிபதியின் இணைய தளம் புதிய சாதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

எஸ்.பி. பிரேம்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டது தொடர்பாகமுன்னாள் முதல்வர்ஜெயலலிதா தெரிவித்துள்ள கருத்துக்கள துரதிரஷ்டவசமானவை என்று உள்துறைச்செயலாளர் பவன் ரெய்னா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ரெய்னா வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்க்கட்சித் தலைவர்ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், கண்காணிப்பாளர் பிரேம்குமார்(ஜெயேந்திரரை கைது செய்தவர்) மற்றும ஆய்வாளர் மாரிமுத்து (தா.கிருட்டிணன்கொலையை விசாரித்தவர்) ஆகியோர் மீது நிர்வாகரீதியாக எடுக்கப்பட்டநடவடிகாகைகளுக்கு அரசியல் காரணங்களை இட்டுக் கட்டி கூறியிருக்கிறார்.

இதுதொடர்பான அவரது அறிக்கை உண்மைக்குப் புறம்பானது. பிரேம்குமார் மீதுபுகார் எழுவது இது முதல் முறையல்ல. மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அவர்சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியபோது முன்னாள் ராணுவ வீரர் ஒருவரை அடித்துத்துன்புறுத்தினார் என்பதற்காக மதுரை விரைவு நீதிமன்றத்தில் 2002ம் ஆண்டு ஜூலைமாதம் 11ம் தேதி தண்டிக்கப்படடார்.

இதுபோன்ற வழக்கில் தண்டனை பெற்ற அலுவலர் உடனடியாக சஸ்பெண்ட்செய்யப்படடிருக்க வேண்டும். ஆனால் (ஜெயலலிதா ஆட்சியில்) அவர் தொடர்ந்துபணியாற்ற அனுமதிக்கப்பட்டார்.

மற்றொரு நிகழ்வில் அரசுப் பணி விதிகளை முற்றிலும் அவர் மீறி அதிமுக தேர்தல்பணியில் ஈடுபட்டதற்காக தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் கடந்த 2004ம்ஆண்டு மே மாதம் 9ம் தேதி அதிமுக ஆட்சியிலேயே இடைநீக்கம் செய்யப்பட்டார்பிரேம்குமார்.

4.9.2006 அன்று பிரேம்குமார் சென்னைக்கு வந்தார். காஞ்சி சங்கராசசாரியார் மீதானவழக்கில் அரசு சாட்சியாக கருதப்படும் ரவி சுப்பிரமணியன் சென்னையில் பொதுமருததுவமனையில் சிசிக்சை பெற்று வருகிறார். அவரை பிரேம்குமார் சந்தித்து,நீதிமன்றக்காவலில் இருந்து தப்பி ஓடும்படியும், அதன் மூலம் இன்றையஅரசாங்கத்திற்கு சங்கடத்தை உண்டாக்கும்படியும் தூணடியுள்ளார்.

அது மட்டுமல்லாமல், அரசுக்கு எதிரான ஆட்டேபகரமான, மோசமான கருத்துக்களைபிரேம்குமார் சொல்லியுள்ளார். இதுதொடர்பாக டிஜிபி அனிப்பிய அறிக்கையின்அடிப்படையில், பிரேம்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அதே போல ஆய்வாளர் மாரிமுத்து 16.7.2006 முதல் பணியிடை நீக்கம்செய்யப்பட்டுள்ளார. மதுரை வழக்கறிஞர் சங்கர நாராயணன் என்பவர்மாரிமுத்துவிடம் புகார் கொடுத்துள்ளார். அதில், தனது பக்கத்து வீட்டில் வசிக்கும்தனுஷ்கோடி என்பவர தன்னைக் கொல்ல முயற்சித்ததாக கூறியிருந்தார்.

இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல்அறிக்கையிலும், வழக்கறிஞரின்புகாரிலும் திருத்தம் செய்ததாக மாரிமுத்து மீது புகார் எழுந்தது. மதுரை உயர்நீதிமன்றக்கிளையின் உத்தரவின் பேரில் மாரிமுத்துவுக்கு எதிராக வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.

மாரிமுத்து மிக மோசமாக நடந்து கொண்டார் என்பது குற்றவியல் பிரிவுவிசாரணையில் தெரியவந்தது. குற்ற ஆவணங்களையே திருத்தி மோசடி செய்தகொடுங் குற்றத்திற்காக மாரிமுத்து பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நடவடிக்கைகளுக்கு பிரதான எதிர்க்கட்சியின் தலைவர் உள்நோக்கம் கற்பித்துகூறியிருப்பது துரதிர்ஷ்டவசமானதாகும் என்று கூறியுள்ளார் ரெய்னா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+