இந்தியா கால்பந்து அணிக்கு பிரேசில் பயிற்சி
பிரஸிலியா:
இந்திய கால்பந்து அணிக்கு பிரேசில் பயிற்சியளிக்கவுள்ளது. இதுதவிர இந்தியாவும், பிரேசிலும் கால்பந்துவீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை பரிமாற்றம் செய்து கொள்ளவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் பிரேஸிலில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். பிரேசில் அதிபர் லூயிஸ் இனசியோலுலா டிசில்வாவை அவர் சந்தித்து பேசினார். இருதரப்பு விவகாரங்கள் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்துஇருதலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தினர்.இந்த பேச்சு வார்த்தைக்குப் பின்னர் இரு தலைவர்களும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், ஐ.நா.அமைப்பை சீர்திருத்த வேண்டும். தற்போதைய உலக சூழ்நிலைகளுக்கேற்ப ஐ.நாவின் செயல்பாடுகள் அமையவேண்டியது அவசியம்.
இந்தியா, பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்அந்தஸ்து பெற தொடர்ந்து பாடுபடுவோம்ம்.
அதிக அதிகாரம் படைத்த, ஜனநாயக ரீதியிலான அமைப்பாக ஐ.நா. உருவெடுத்தால் மட்டுமே மாறி வரும் உலகசூழ்நிலைக்கேற்ப ஐ.நாவால் திறம்பட செயல்பட முடியும் என இந்தியாவும், பிரேசிலும் நம்புகின்றன என இருதலைவர்களும் கூறியுள்ளனர்.
பின்னர் மன்மோகன் சிங்கும், பிரேசில் அதிபரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போதுமன்மோகன் சிங் கூறுகையில், பிரேசில் நாட்டு சுற்றுப்பயணம் எனக்கு மிகுந்த நிறைவையும், மகிழ்ச்சியையும்தந்துள்ளது.
லத்தீன் அமெரிக்க நாடான பிரேசில் மீது எப்போதும் எனக்கு அன்பு உண்டு. இந்தியாவைப் போலவேபிரேசிலும் பரந்து விரிந்த மிகப் பெரிய ஜனநாயக நாடாகும். இந்தியாவைப் போலவே பன்முகம் கொண்டஜனநாயக நாடு பிரேசில்.பிரேசில் அதிபர் லுலா இந்தியாவின் சகோதரர், நண்பர் மாதிரி. மிகத் திறமையுடன் பிரேசில் நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார் லுலா.
அவரது தலைமையில் பிரேசில் வளமை பெற்று வருகிறது. மிகச் சிறந்த தலைவராக லுலா விளங்குகிறார்.இந்தியாவும், பிரேசிலும் இணைந்து செயல் படவேண்டும் என்பதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார் லுலா. இதுஎனக்கு பெரும் மகிழ்ச்சி தருகிறது. நமக்கு முன்பு மிக நீண்ட பயணமும், பாதையும் காத்துள்ளது. தூரத்தைப்பற்றிக் கவலைப்படாமல் இரு நாடுகளும் இணைந்து பயணத்தை தொடரும் என நான் நம்புகிறேன்.
பிரேசிலுக்கு நான் வருவது இதுவே முதல் முறை. ஆனால் இங்கு வந்த பின்னர் பிரேசில் மக்களின் அன்புஎன்னை வெகுவாக கவர்ந்து விட்டது. என் இதயத்தின் ஒரு பகுதியை இங்கேயே விட்டுச் செல்கிறேன் என்றார்மன்மோகன் சிங்.
இதற்கிடையே, இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளுக்கிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்காகியுள்ளன.அதில் ஒன்றாக இந்திய கால்பந்து அணிக்கு பிரேசில் நாட்டு பயிற்சியாளர் நியமிக்கப்படவுள்ளார்.
இது தவிர இந்தியாவும், பிரேசிலும் கால்பந்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை பரிமாற்றம் செய்துகொள்ளவும் ஒப்பந்தத்தில் வழி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கால்பந்தில் கோலோச்சி வரும் பிரேசில்நாட்டின் உயரிய பயிற்சியும், அனுபவமும் இந்திய கால்பந்து வீரர்களுக்குக் கிடைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நடந்து முடிந்த ஜெர்மனி உலகக் கால்பந்து போட்டியில், போர்ச்சுகல், ஜப்பான் ஆகிய அணிகளுக்குபிரேசில் நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் பயிற்சியாளர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் ஈஸ்ட் பெங்கால் கால்பந்து அணியின் பயிற்சியாளராக பிரேசில் நாட்டைச் சேர்ந்த கார்லோஸ்ரொபர்டோ பெரைரா சமீபத்தில் தான் நியமிக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். விரைவில் இந்தியஅணியின் பயிற்சியாளராக பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் நியமிக்கப்படும் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.
நிச்சயமாக இது இந்திய கால்பந்து ரசிகர்களுக்கு பெரும் சந்தோஷம் தரும் செய்தியாக அமையும் என்பதில்சந்தேகம் இல்லை.












Click it and Unblock the Notifications