மும்பை குண்டு வெடிப்பு: டைகர் மேமன் குடும்பத்தில் 4 பேர் குற்றவாளிகள்

Subscribe to Oneindia Tamil

மும்பை:

மும்பையில் கடந்த 1993ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தடா நீதிமன்றம் முதல் கட்டதீர்ப்பை வழங்கியுள்ளது. தாவூத் இப்ராகிமின் கூட்டாளியான டைகர் மேமன் குடும்பத்தினர் 4 பேர்குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

1993ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி மும்பையில் பதிமூன்று இடங்களில் தொடர் குண்டுகள் வெடித்தில் 257 பேர்உயிரிழந்தனர்.

பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐயின் தூண்டுதலின் பேரில் தாதா தாவூத் இப்பராகிம் தனது கூட்டாளிகள்மூலம் இந்த பயங்கரத்தை நிறைவேற்றியது தெரிய வந்தது.

குண்டு வெடிப்புக்கு முன்பே தாவூத் இப்பராகிம் பாகிஸ்தானுக்கு தப்பி ஓடி விட்டான். அவனது கூட்டாளிகளானடைகர் மேமன் மற்றும் தோசா ஆகியோர்தான் முன்னின்று குண்டு வெடிப்பை நிகழ்த்தினர்.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து 199 பேர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது. இதில் 29 பேர் உச்சநீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்டனர். 11 பேர் விசாரணையின் போது இறந்துவிட்டனர்.

முடிவில் டைகர் மேமன் குடும்பத்தை சேர்ந்த 8 பேர் மற்றும் நடிகர் சஞ்சய் தத் உள்பட 123 பேர் மீது வழக்குதொடர்ந்து நடந்தது.

குண்டு வெடிப்பு நடத்த தேவையான பணம், கார்கள், வெடிமருந்துகளை வழங்கியதாக மேமன் சகோதர்கள் மீதுகுற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான தாவூத் இப்பராகிம், டைகர் மேமன், தேசாய் உள்ளிட்ட 29 பேர்தலைமறைவாக உள்ளனர்.

இந்த வழக்கு மும்பை ஆர்தர் ரோடு ஜெயில் வளாகத்தில் உள்ள தடா சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.நீதிபதி பிடி. கோடா வழக்கை விசாரித்தார்.

இந் நிலையில் இந்த வழக்கில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் பார்ட்பார்ட்டாக தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார். குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கான தண்டனை பற்றிஇறுதியில் அறிவிக்கப்படும்.

குற்றவாளிகள் பட்டியலில் முதல் 8 இடங்களில் உள்ள மேமன் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நேற்று தீர்ப்புவழங்கப்பட்டது. தீர்ப்பின் விவரம்:

குண்டு வெடிப்புக்கு சதித் திட்டம் தீட்டியதில் டைகர் மேமன், அவரது சகோதரர்களான யாகூப் மேமன், இசா,யூசுப் மற்றும் யாகூப் மேமனின் மனைவி ரூபினா மேமன் ஆகியோருக்கு பங்கு இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த 4 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுகிறார்கள். டைகர் மேமனின் தந்தை மேமன், தாயர்ஹனிபா மேமன், மற்றொரு சகோதரர் சுலைமான் மேமன், டைகரின் சகோதரரரின் மனைவி ரஹீன் மேமன்ஆகியோருக்கு எதிராக போதிய ஆதரங்கள் இல்லாத காரணத்தால் விடுதலை செய்யப்படுகிறார்கள் என தீர்ப்பில்கூறப்பட்டது.

இதற்கிடையில் தீர்ப்பை கேட்பதற்காக நடிகர் சஞ்சய் தத் உள்பட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்நீதிமன்றத்திற்க்கு வந்திருந்தனர். குற்றாவளிகள் பட்டியலில் சஞ்சய் தத் பெயர் 117வது இடத்தில் உள்ளது.இதனால் அவருக்கான தீர்ப்பு பற்றி தெரிய 3 மாதம் வரை ஆகும் என்று தெரிகிறது.

சஞ்சய் தத் நடித்து சமீபத்தில் வெளிவந்த லகேரஹோ முன்னாபாய் படம் வசூலில் சக்கை போடு போட்டுவருகிறது. இதனால் அவர் நிறைய படங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர். இந் நிலையில் சஞ்சய் தத்துக்குதண்டனை வழங்கப்படாடால் அது தயாரிப்பாளர்களை பெரிதும் பாதிக்கும் என கருதப்படுகிறது.

முன்னதாக தீர்ப்பு கூறப்படுவதையொட்டி ஆர்தர் ரோடு சிறை அமைந்துள்ள பகுதியைச் சுற்றிலும் கடுமையானபாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+