அதிமுகவின் சிக்குன் குனியா போராட்டம்: வைகோவும் பங்கேற்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சிக்குன்குனியா நோய் பரவுவதை தமிழக அரசு தடுக்கவில்லை என்று கூறி அதிமுகநடத்தவுள்ள போராட்டத்தில் தானும் கலந்து கொள்ளவிருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

சென்னையிலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் சிக்குன்குனியா வேகமாக பரவிவருகிறது. பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் இந்த நோய் தாக்குதலில் சிக்கிபரிதவித்து வருகின்றன.

தகுந்த சிகிசிசை இல்லாமல் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள்வருகின்றன. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சைகொடுக்கப்பட்டாலும், நாட்கணக்கில், வரக் காணக்கில் நடமாட முடியாமல்அவதிப்பட வேண்டிய நிலை உள்ளது.

நோய் பரவாமல் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டது.அரசு மருத்துவினைகளில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சரியான சிகிச்சைஅளிக்கப்படவில்லை. மருந்து பற்றாக்குறை உள்ளது.

இதனால் கிராமப்புற மக்கள்தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களால்காசு கொடுத்து தனியார் மருத்துவனைகளில் சிகிச்சை எடுத்துக் கொள்ளமுடியவில்லை. இந்த வேதனையையும், நோய் பரவலையும் தடுக்க போர்க்காலஅடிப்படையில செயல் தமிழக அரசு தவறி விட்டது.

தனது கடமையிலிருந்து தவறி விட்டது. இதை கண்டித்து அதிமுக சார்பில் கூட்டணிகட்சிகள் வரும் 16ம் தேதி மாலை 5 மணிக்கு மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்நடத்தவுள்ளன. இதில் சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் நான் கலந்துகொள்ளவுள்ளேன்.

திருச்சியில் அவைத் தலைவர் எல்.கணேசன் கலந்து கொள்கிறார்.செஞ்சி ராமச்சந்திரன் விழுப்புரத்திலும், திருநெல்வேலியில் நாசேரத் துரையும்,மல்லை சத்யா காஞ்சிபுரத்திலும் பங்கேற்பார்கள்.

இவ்வாறு கூறியுள்ளார் வைகோ.

சிக்குன் குனியா அரசியல்? கிருஷ்ணசாமி கண்டனம்:

இதற்கிடையே சிக்குன் குனியா பிரச்சினையை தமிழக எதிர்க்கட்சிகள் அரசியலாக்குவது கண்டனத்துக்குரியது என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர்டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சிக்குன் குனியா நோயை கட்டுப்படுத்தத் தவறியதாக கூறி திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும்அதிமுக கூட்டணிக் கட்சியினர் வருகிற 16ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர். இதுகண்டனத்துக்குரியது.

இப்படி தேவையில்லாத போராட்டங்களை நடத்தி காலத்தையும், சக்தியையும் வீணடிப்பதை விட்டு விட்டு மாநிலம் முழுவதும் மருத்து முகாம்களை நடத்திமக்களுக்கு உதவலாம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்க உதவலாம்.

சிக்குன் குனியாவை தேசிய பேரழிவாக மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போர்க்காலஅடிப்படையில் சிகிச்சை உள்ளிட்ட வசதிகள் கிடைக்க உதவ வேண்டும்.

புனே நகரில் மட்டுமே இந்த நோயை கண்டறியும் ஆய்வக வசதி உள்ளது. தமிழகத்திலும் இதுபோன்ற ஒரு சோதனை ஆயவகத்தை நிறுவ தமிழக அரசுமுயற்சிக்க வேண்டும். இதேபோல மாநிலத்திற்கு ஒரு ஆய்வகம் அமைக்க வேண்டும்.

சிக்குன் குனியாவுக்கு தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுவோருக்கு இலவச மருந்துகள் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்றார் கிருஷ்ணசாமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+