ராக்கெட் லாஞ்சர் கடத்தலில் புலிகளுக்கு தொடர்பில்லை-ஆந்திர டிஜிபி
சென்னை:
சென்னை அம்பத்தூரிலிருந்து லாரி மூலம் ஆந்திராவுக்கு கடத்தி வரப்பட்ட ராக்கெட் லாஞ்சர்கள்அம்பத்தூரில்தான் தயாரிக்கப்பட்டன. இவற்றுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் சற்றும் தொடர்பில்லை என்றுஆந்திர மாநில டிஜிபி ஸ்வரண்ஜித் சென் கூறியுள்ளார்.
ஆனால், இவை அம்பத்தூரில் தயாரிக்கப்பட்டது இன்னும் உறுதியாகவில்லை என தமிழக டிஜிபி முகர்ஜிகூறியுள்ளார்.சென்னை அம்பத்தூரில் உள்ள கிராந்தி லாரி டிரான்ஸ் போர்ட்ஸ் என்ற நிறுவனத்தின் லாரி மூலம் ஆந்திரமாநிலத்துக்கு கள்ளத்தனமாக கொண்டு செல்லப்பட்ட ராக்கெட் லாஞ்சர்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் சமீபத்தில்,ஆந்திர மாநிலம் மெஹபூப் நகர் மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக ஆந்திர போலீஸார் சென்னை வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்இந்த விவகாரம் குறித்து தமிழக காவல்துறை டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் விவாதிப்பதற்காக ஆந்திரடிஜிபி சென், சென்னை வந்தார்.
எழும்பூர் காவல்துறை அதிகாரிகள் விருந்தினர் மாளிகையில், காலை 9.45 மணிக்கு கூட்டம் தொடங்கியது.இக்கூட்டத்தில் தமிழக டிஜிபி முகர்ஜி, சென்னை மாநகர ஆணையர் லத்திகா சரண், கூடுதல் ஆணையர் ஜாங்கிட்,உளவுப் பிரிவு ஐஜி சுப்ரமணியம், கியூ பிரிவு எஸ்.பி. டேவிட்சன் ஆசிர்வாதம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆந்திரா சார்பில் டிஜிபி ஸ்வரண்ஜித் சென், கியூ பிரிவு எஸ்.பி. சீனிவாச ரெட்டி உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் ஸ்வரன்ஜித் சென் வெளியே வந்தபோது செய்தியாளர்கள் சூழ்ந்து ஆலோசனைக்கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது என்று கேட்டனர். அதற்கு சென் பதிலளிக்கையில், ஆந்திர மாநில கியூபிரிவு போலீஸாரும், தமிழக டிஜிபி நியமித்துள்ள தனிப்படையும் இணைந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதுவரை நடந்த விசாரணையில் கிடைத்த விவரங்கள் இக்கூட்டத்தில் பரிமாறிக் கொள்ளப்பட்டது. திருப்தியானகோணத்தில் விசாரணை சென்றுகொண்டிருக்கிறது.
விரைவில் நல்ல தகவல் வரும் என்று நம்புகிறோம். சில முக்கியமான தகவல்கள் எங்களுக்குக் கிடைத்துள்ளன.பிடிபட்ட ராக்கெட் லாஞ்சர்கள், அம்பத்தூரிலேயே தயாரிக்கப்பட்டவை என்று தெரிய வந்துள்ளது. மேலும்இவை நவீனமானதல்ல, வீரியம் குறைந்தவை.
ராக்கெட் லாஞ்சர்களை கள்ளத்தனமாக கடத்திய சீனிவாச ரெட்டி இதுவரை பிடிபடவில்லை. (முன்னதாக சீனிவாசரெட்டி பிடிபட்டதாக தகவல்கள் வந்தன). அவருக்கு வலை வீசப்பட்டுள்ளது. நக்சலைட்டுகளுடன் அவர்பதுங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது. விரைவில் அவர் பிடிபடுவார். அவர் குறித்த முழுமையான தகவல்களும்இன்னும் கிடைக்கவிலலை. அவரது பெயர் உண்மையானதா என்ற சந்தேகமும் எங்களுக்கு உள்ளது.
இந்த ராக்கெட் லாஞ்சர் விவகாரத்தில் விடுதலைப் புலிகளுக்கு சற்றும் தொடர்பு இல்லை. அதற்கானஆதாரங்களோ, சான்றுகளோ எதுவும் இல்லை என்றார் சென்.
தமிழக டிஜிபி மறுப்பு:
இதற்கிடையில் தமிழக டிஜிபி முகர்ஜி கூறுகையில், ஆந்திரவில் பறிமுதல் செய்யப்பட்ட ராக்கெட் லாஞ்சர்கள்அம்பத்தூரில் தயாரானதா என்பது இன்னும் உறுதியாகவில்லை என்றார்.
முன்னதாக, ஸ்வரண்ஜித் சென்னுக்கு மிக பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அவர் தங்கியிருந்தஎழும்பூர் போலீஸ் அதிகாரிகள் விருந்தினர் மாளிகையில் கமாண்டோ படை பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
ஆலோசனைக் கூட்டம் நடந்தபோது, பத்திரிக்கையாளர்கள் இந்தக் கூட்டத்தை படம் பிடிக்கவும், செய்திசேகரிக்கவும் அனுமதிக்கப்படவில்லை. கூட்டம் நடந்த இடம் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. மிகுந்தபோராட்டத்துக்கு பினனர் தான் ஆந்திர டிஜிபியை பத்திரிக்கையாளர்கள் சந்திக்க முடிந்தது.
ஹைதராபாத்திலிருந்து ஸ்வரன்ஜித், சென்னைக்கு வந்தபோது விமான நிலையத்தில் அவரை செய்தியாளர்களும்,புகைப்படக்காரர்களும் சூழ்ந்து கொண்டு பேட்டி எடுக்கவும், போட்டோ எடுக்கவும் முண்டியடித்தனர். அப்போதுநெரிசலில் சிக்கி சென் தள்ளப்பட்டதாகவும், அதனால்தான் ஆலோசனைக் கூட்டத்தின் போதுபத்திரிக்கையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்று பின்னர் சென்னை போலீஸார் விளக்கினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications